ஆவின் பாக்கெட்டை கொடுத்துட்டு பசுமாட்டை ஓட்டிட்டு போற திட்டமா இருக்கே – ரஜினி அதிர்ச்சி

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று தனது டிஆர்பி லெவலை ஏற்றிக் கொள்வதற்காக சினிமா சம்பந்தப்பட்ட எத்தனையோ விஷயங்களை செய்து பார்த்தது. எதுவும் வொர்க்கவுட் நஹி. சிண்டை பிய்த்துக் கொண்டவர்களுக்கு திடீரென கண்ணில் பட்டவர் கே.எஸ்.ரவிகுமார். அவருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தினாலென்ன என்று நினைத்தார்கள்.

அவர் சினிமாவுக்கு வந்து இருபத்தைந்து வருடம் ஆகிவிட்டது. அதற்கான வெள்ளி விழாதான் இது என்று கூறிவிட்டார்கள். கணக்குப்படி பார்த்தால் அதற்கு இன்னும் இரண்டு வருஷம் இருப்பதாக கூறுகிறார்கள் புள்ளி விபர புலிகள். இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனை அழைத்தவர்கள் அப்படியே ரஜினியையும் அழைத்தார்களாம்.

ஆவின் பாக்கெட்டை கொடுத்துட்டு பசுமாட்டை ஓட்டிட்டு போற திட்டமா இருக்கே என்று முதலில் அதிர்ந்தவர், என் பெயரை எங்கும் போடக் கூடாது. கே.எஸ்.ரவிகுமாருக்காக விழா தினத்தன்று மேடைக்கு வருவேன் என்று கூறியிருக்கிறாராம்.

Has Director KS Ravikumar completed 25 years in Cinema?

There were reports and announcements made regarding felicitations to director KS Ravikumar on his successful completion of 25 years in Tamil film industry. Directors union in association with Raj TV are preparing to felicitate the director on 4th Jan. 2014. There were murmurs that the TV channel in order to raise its TRP ratings has arranged for this event, though the director is said to be completing 25 years after 2 years according to the data available with knowledgeable sources. This apart, Ulaganayagan has consented to be present for the occasion. Super Star Rajinikanth too was requested to grace the event . Surprised, he seems to have told the organizers not to use his name for the event, but he would attend it for KS Ravikumar’s sake.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இன்னும் ட்ரெய்லரே வரலயே… ஜில்லா வந்துருமா?

‘ஜில்லாவுக்கு குல்லா போட்ருவாங்க போலிருக்கே.... ’ விஜய் ரசிகர்களை இப்படி பேசி பேசியே கோபமாக்கிவிடும் போலிருக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, ‘ஜில்லா பொங்கலுக்கு வந்துவிடுமா?’ என்கிற புது டவுட்டை...

Close