இந்திய பெண்களை எச்சரிக்கும் ஹாலிவுட் படம்

ஹாலிவுட் தமிழர்கள் என்று சிலரை பார்த்து காலப்போக்கில் நாமெல்லாம் காலரை உயர்த்திவிடத்தான் போகிறோம். அதற்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டே போகிறார்கள் நம் தமிழர்கள். அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜாக் ஏ ராஜசேகர் ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் ‘பிளட் அண் கர்ர்ரி’.

வெளிநாட்டிற்கு திருமணமாகி செல்லும் இந்திய பெண்களுக்கு ஏற்படும் துயரங்களை சொல்லுகிற படம்தானாம் இது.

மனைவி இறந்து கிடக்கிற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. அதிர்ச்சியான கணவன் அமெரிக்காவின் அவசர உதவிக்கான 911 எண்ணை உதவிக்கு அழைக்க முற்படுகிறான். அந்த நேரம் பார்த்து வாசலில் காலிங் பெல் ஒலிக்கிறது. கதவு லென்ஸ் வழியாக பார்த்தால், மனைவியால் பார்ட்டிக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் நிற்கிறார்கள். வேறு வழியில்லாத அந்த கணவன், மனைவியின் உடலை வீட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அவர்களை உள்ளே அழைக்கிறான்.

அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடாதபடி அவன் சமாளிப்பது நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவள் ஏன் இறந்தாள்? அவளது பிணத்தை என்ன செய்தான்? என்பதை படத்தின் முடிவில் அதிர்ச்சியடைகிற விதத்தில் சொல்லியிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் அதுல் ஷர்மா.

உலகம் முழுவதும் ஒரே நாளில் இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ஜாக் ஏ.ராஜசேகர்.

Blood and Curry a tale of foreign borne Indian wives

Jack A. Rajasekar an NRI from US has produced and directed a Hollywood film titled as Blood and Curry which depicts the lives of foreign borne Indian wives. Indian girls in their excitement of enjoying pleasures of life in foreign countries are lured and abused, and even sometimes get murdered for lust or money. Rajasekar has penned a script based on their miserable and impending perils that they most likely to face during their lives abroad.

The film begins with the dead body of wife and when her husband tried to contact 911, friends of his wife are knocking his door for a party that his wife had invited. Puzzled and not known how to handle the situation, he covered his wife’s dead body and handled the situation in light hearted way. How his wife was dead and what he did with the dead body, are told in a thrilling climax.

Rajasekar is currently busy putting his efforts to release the film all over the world simultaneously. It is a must for Indian girls to be aware and cautious in their lives if they plan to choose foreign husbands.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிளஸ்–2 கணித தேர்வில் 2 வினாக்கள் தவறானது: மதிப்பெண் வழங்க கோரிக்கை

பிளஸ்–2 கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. கணிதப் பாடத்தில் 200–க்கு 200 மதிப்பெண்கள் முழுமையாக அதிக மாணவர்கள் எடுப்பது வழக்கம். இந்த ஆண்டும் கணித...

Close