இனிமேதான் இருக்கு அனிருத்துக்கு… பொங்கியெழுமா பெண்கள் அமைப்பு?

யூ ட்யூப் என்ற அழகான அலமாரியில் கண்டதையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த கண்டதையும் வரிசையில் தனது ஐட்டம் ஒன்றையும் அடுக்கிவிட்டு கைதட்டல் விழும் என்று காத்திருந்த அனிருத்துக்கு விழுந்தது கைதட்டல் அல்ல, அதையும் தாண்டி கனமானது.

முதலில் அந்த யூ ட்யூப்பில் அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் விஷயம் என்ன? அதை சொல்வதற்கோ எழுதுவதற்கோ நாக்கும் கையும் ஒரு சேர கூசுகிறது. ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை சொன்னால் அது கெட்ட வார்த்தையாகாது என்று எவன் கண்டு பிடித்தானோ, அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். Aint nobody ****in with my music என்ற பெயரில் மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சில வினாடிகள் மட்டுமே ஒலிபரப்பாகும் அந்த வீடியோ பதிவில் ஒரு இடத்தில் கூட அனிருத்தின் முகம் தென்படவில்லை. வெறும் குரல் மட்டுமே. (ஒருவேளை, அது என் கைக்கர்யமே அல்ல என்று அவர் தப்பித்துக் கொள்வதற்கான ஏற்பாடா என்றும் புரியவில்லை) அந்த வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யலாம். https://www.youtube.com/watch?v=YhPJ-FglJNc

சரி… பார்த்துவிட்டீர்களா? விஷயத்துக்கு வருவோம். இந்த ஆல்பம் குறித்தும் அதை உருவாக்கி யூ ட்யூபில் வெளியிட்ட அனிருத் குறித்தும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் வழக்கறிஞர் ஜெபதஸ் பாண்டியன். அதில் கூறப்பட்டிருப்பதாவது-

பிரபல இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் வெளியிட்டுள்ள Aint nobody ****in with my music என்ற மியூசிக் வீடியோ படுமோசமாகவும் பெண்களை, தாய்மார்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. மேலும் வீடியோவில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் மிக வக்கிரமாகவும், சமூக விரோதமாகவும் உள்ளன. இதுபோன்ற வீடியோக்களை, பாடல்களை அனுமதிப்பது சமூக அமைதியை, ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும். குறிப்பாக பெண்களின் தாய்மையைக் கூட கேவலமாக சித்தரித்துள்ள இந்த வீடியோ, பெண்களை புனிதமாகக் கருதும் இந்த நாட்டில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சினிமாடோகிராப் சட்டம் 1957ன் படி இந்த வீடியோவை வெளியிட்டதற்காக அனிருத் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு 2000-ஐயும் அனிருத் மீறியுள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் “என்று குறிப்பிட்டுள்ளார்.

இளம் கன்று பயமறிய வேண்டாம். வெட்கமறிய வேண்டாம். பெண்ணியம் காக்கும் பெண்கள் அமைப்பெல்லாம் இந்த நாட்டில் இன்னும் சுரணையோடுதான் நடமாடி வருகிறார்கள் என்பதை கூடவா அறிய மாட்டீர்கள்? இனிமேதான் இருக்கு இந்திரவிழா….

Anirudh in soup for teaser of his album

Music composer Anirudh does have some talents but misusing it is certainly a criminal act. Yes, he is young, may not be aware of the consequences. But the younger generations of today have a bit of common sense, and wonder how it has not struck Anirudh. When Indian culture in general and Tamil culture in particular portray women in high esteem purely because of the motherhood, degrading them and corrupting the young brains to get into immoral acts is highly condemnable. As a celebrity he should have been more vigilant with what he is doing and talking. The recent posting by him in You Tube on 16th Jan. of a teaser ‘Aint nobody**** in with my music’ is vulgar and obscene, to see the least.

Click here to see the teaser www.youtube.com/watch?v=YhpJ-FglJNc

One of the city based lawyer, s. Jebadas Pandian, on 20th Jan. has filed a police complaint against the composer (rightly so), alleging that the audio teaser he has posted on You Tube contains words that are derogatory and abusive of women. He also sought Anirudh to be tried under Information Technology Act and IPC.

The lyrics are degrading women in general, and mothers in particular, the lawyer added. “Being a celebrity and having achieved fame at such a young age, Anirudh has chosen to abuse the same and corrupt our youth exposing them to such lyrics and provoking them to commit acts of illegality,” the complaint read.

Famed for his ‘why this kolaveri di’ song, Anirudh had been promoting the yet-to-be released song as his “first-ever independent album” in social networking sites. Despite several news agencies trying to reach him for his reaction proved futile.

Being young and has done innocently is one thing, but to gain popularity with youth using adultery language is another. We live in India, and we have a culture to celebrate and embrace. He does not live in Western countries to write whatever and get away with it, he must remember.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நஸ்ரியா ஹேப்பிஈஈஈஈஈஈ

ஒருவேளை செய்தி உண்மையாக இருப்பின், ஜெய்க்கு நஸ்ரியா கொடுத்த பெப்பே... என்று சிங்கிள் ஸ்மைலில் பைலை குளோஸ் பண்ணிவிடுவார்கள் கிசுகிசு எழுத்தாளர்கள் என்றுதான் கடந்த செய்தியை முடித்திருந்தோம்....

Close