இனிமேலாவது ஜாக்கிரதையாக…
அங்காடி தெரு மகேஷுக்கு முறையான அட்வைசர்கள் யாரும் இல்லாததால் அப்படத்தின் வெற்றிக்கு பிறகும் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தார். தற்போது அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் மகேஷின் கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார். பணம் வருகிறது என்பதற்காக யார் கூப்பிட்டாலும் போய் நடிக்க ஆசைப்படக் கூடாது என்பதுதான் இருவரும் எடுத்திருக்கும் அதிரடி முடிவாம். விரைவில் வெளிவரப்போகும் அடித்தளம் தனது புகழை மீட்டெடுக்கும் என்கிற மகேஷ், கஞ்சா கருப்பு தயாரிக்கும் வேல் முருகன் போர்வெல் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னணி இயக்குனர்களை நேராக பார்த்து ஒரு ஹலோ சொல்லிட்டு வாங்க. அவங்களுக்கு தேவைப்படும் போது உங்க முகம் நினைவுக்கு வருமில்லையா என்று பத்திரிகையாளர்கள் சிலர் கொடுத்த அட்வைசை பெரிதாக நம்பியிருக்கும் மகேஷ், இப்படத்தின் ஷுட்டிங் முடிந்ததும் முன்னணி இயக்குனர்களை தேடிச் செல்ல முடிவெடுத்திருக்கிறாராம். மறுபடியும் வசந்தபாலனை பார்க்கறதுதானே!