இனி ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பதில்லை… -நயன்தாரா திடீர் முடிவு

இது ஊடலா, உமட்டலா என்றே தெரியவில்லை. ஆனால் நயன்தாரா எடுத்த முடிவு ஆர்யாவை அலற வைத்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த ராஜா ராணிக்கு ரகளையான கலெக்ஷன் ரிப்போர்ட்! சூட்டோடு சூடாக இதே காம்பினேஷனில் இன்னொரு கல்லா பெட்டியை ஓப்பன் பண்ணிவிட துடியாய் துடிக்கிறது தயாரிப்பு தரப்பு. ராஜா ராணி ஷுட்டிங்கின் நேரத்திலேயே ‘இந்தா வச்சுக்கங்க… அடுத்த படமும் நம்ம பேனர்லதான்’ என்று ஒரு அட்வான்சை கொடுத்து விட்டார்கள் டைரக்டர் அட்லீக்கு. இதெல்லாம் எல்லா படங்களுக்கும் நடக்கிற நரி தந்திர லாஜிக்தான். படம் ஓடினால் ஆள் சிக்கினார். ஓடலேன்னா, நஷ்டத்தோடு நஷ்டமா இந்த அமௌன்ட்டும் போய் தொலையட்டுமே என்கிற மனோ நிலை அது.

நல்ல நேரம்… ஆள் சிக்கிவிட்டார். மற்றவர்களையும் அதே மாதிரி அமுக்க வேண்டுமே! தனக்கு ஹிட் கொடுத்த டைரக்டர் என்றால் எந்த ஹீரோவுமே ஆமாம் சொல்லதான் ஆசைப்படுவார். ஆர்யாவும் அப்படியே… அட்லீ இயக்கத்தில் நடிக்க நான் ரெடி என்று கூறிவிட்டார். ஜோடியாக நடிக்க நயன்தாராவிடமே பேசலாம் என்று முடிவு செய்த அட்லீயும் ஆர்யாவும், அக்கா வீட்டு கதவை தட்ட, அங்கிருந்து வந்த பதில்தான் சோகத்திலும் சோகம்.

‘நம்ம காம்பினேஷன் இனி வேணாம் ஆர்யா’ என்று கூறிவிட்டாராம் அவர். இப்போது மட்டுமல்ல, இனி எப்போதும் ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்திருக்கிறாராம் நயன். இதற்கு என்ன காரணமா இருக்கும்?

எண்ணைய தேய்ச்சுகிட்டு ஏரிக்கரையில உருண்டா எத்தனை மண்ணு ஒட்டுமோ, அத்தனை சந்தேகங்களை கிளப்புது கோடம்பாக்கம்.

For English users:

Nayanthara rejects Arya’s film, not to do any film in future too!

Kollywood is in for a rude shock when Nayanthara rejected the offer to act in Arya’s film under Atlee’s direction again. The industry circle is not able to guage if its a lovers’ fight or anything wrong…….? It is a million dollar question only the parties concerned can reveal the answer. It all started when the makers of Raja Rani happy with the explosive response from the audience for their film, went on to book Atlee-Arya-Nayan combination for their next film. When Atlee and Arya decided to meet Nayanthara on the proposal, Nayan said to have told Arya personally, ‘Let us not pair, Arya’. It was also later learnt that she had decided not to act with Arya again in future too. If it is a prelude to marriage or a lovers’ fight or something really have had happened between them.  Kollywood is confused, so are we!

1 Comment
  1. durai says

    அசத்துறீங்க….அந்தணன் …வாழ்த்துக்கள் …

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லவ்வரை பிரதர்னு கூப்பிட்டா தப்பில்ல… -ஆர்யா அதிரடி பதில்

ராஜா ராணி படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது. வழக்கம்போல நயன்தாரா, சந்தானம் ஆகியோர் பிரஸ்சை சந்திக்க அஞ்சி வீட்டிலிருந்தபடியே பிரஸ்மீட்டுக்கு ஆசி வழங்க, மொத்த...

Close