இரட்டை வேடத்தில் விஜய் இது புதுப்பட பில்டப்!

ஏ.ஆர்,.முருகதாசுடன் விஜய் நடிக்கும் படத்தில் பள பள மற்றும் பல பல சுவாரஸ்யங்கள் இருக்கிறதாம். ‘நான் எதுவுமே சொல்றதில்லை, அவங்களா கதை கட்றாங்க என்று முருகதாஸ் புலம்பினாலும்… யூகங்களுக்கு பஞ்சம் ஏது? ஆனால் கதை இலாகாவிலிருந்து கசிந்த தகவல் இது.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அழகிய தமிழ் மகன், வில்லு படங்களுக்கு பிறகு விஜய் நடிக்கும் இரட்டை வேட படம் இது என்கிறார்கள். ஜில்லாவில் தன் ரசிகர்களை பஞ்ச் டயலாக் பேசாமல் ஏமாற்றத்தில் விட்ட விஜய் இந்த படத்தில் அடித்து நொறுக்கிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம். முள்ளுக்கும் வலிக்காம சேலைக்கும் சேதமில்லாமல் இருக்குமாம் இந்த பஞ்ச் டயலாக்ஸ்.

இந்த படத்திற்கு வாள்னு தலைப்பு வச்சுருக்கறதா எழுதுறாங்க. அப்படியெல்லாம் இல்லை என்று கூறிவரும் முருகதாஸ், தனது உதவி இயக்குனர் குழுவிடம் ஆளுக்கு 100 தலைப்பாவது எழுதணும் என்று உத்தரவிட்டிருப்பதால், ஆளாளுக்கு ராமஜெயம் ரேஞ்சுக்கு தலைப்பு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


‘அரசியல்’னு தலைப்பு வைங்க. பத்திக்கும்….

Vijay to don dual role in AR Murugadoss’ film

Vijay and director Murugadoss are preparing themselves to offer yet another blockbuster film after Thuppakki. They are planning to complete the film as early as possible. While Murugadoss denied that Vaal is not the title of the film, and is yet to be titled, it is heard that he has asked his assistants to choose catchy titles for the film.

We understand from reliable source that the film will have Vijay playing dual roles after, Azhagiya Thamizh Magan and Villu. Vijay’s fans who were disappointed as there were no punch dialogues in Jila will be happy to see their actor mouthes punch dialogues in Murugadoss’ film. Vijay this time has made sure to include some punch dialogues in the film. However, these dialogues will be soft and mellow without hurting anyone, the sources added.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ அசத்திட்டீங்க…. ’ ஏ.ஆர்.முருகதாசிடம் பாராட்டு பெற்ற இயக்குனர்

தமிழ்சினிமாவின் பிதாமகர்கள் என்று சொல்லப்படும் பாரதிராஜா, பாலசந்தரிடம் தொழில் கற்றுக் கொண்டு வந்தவர்கள் கூட நாற்காலியை முக்காலியாக்கி, அந்த முக்காலியையும் முடியாத காலியாக்கிவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ்...

Close