‘இரண்டாம் உலகம்’ படத்தின் விநியோகஸ்தர் ஆனார் ஆர்யா!

நடிச்ச சம்பளத்தை வாங்கறதுக்குள்ளே, குடிச்ச பாலையெல்லாம் கக்க வச்சுருவானுங்க போலிருக்கே என்று முன்னணி ஹீரோக்களே சில நேரங்களில் புலம்புவதுண்டு. அதற்காக சும்மாவா போக முடியும்? மிச்ச மீதி ஏரியா இருந்தா அதை என் பெயருக்கு எழுதிக் கொடுங்க என்று வாங்கிக் கொள்கிற பக்குவத்திற்கும் வந்துவிடுவார்கள்.

கோடம்பாக்கத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடக்கிற இந்த பஞ்சாயத்தில் கொல்லை குடி காட்டையெல்லாம் இழந்துவிட்டு அடிச்ச இன்விடேஷனும் அஞ்சாறு ஆடியோ கேசட்டும்தான் மிச்சம் என்று கிளம்பிப் போகிற புரட்யூசர்களும் இங்கே இருக்கிறார்கள். இனிமேலும் இருப்பார்கள்.

சில ஹீரோக்கள் ரொம்ப புத்திசாலிகள். மதுரைய கொடுங்க, டி.கே வ கொடுங்க என்று கேட்டு வாங்கிக் கொள்வார்கள். சம்பளத்திற்கு பதிலாக இப்படி பெறும் பட ஏரியாவை கிடைத்த தியேட்டரில் ரிலீஸ் செய்து கொஞ்சமாவது தேற்றிக் கொள்வார்கள். நாம் சொல்லப் போகும் விஷயம் அந்த ரகம் அல்ல. ஏனென்றால் இது பெரிய நிறுவனத்தின் பெரிய படம். இருந்தாலும் ஹீரோவின் ஆர்வத்தை மெச்ச வேண்டுமல்லவா? அதற்காக…

இரண்டாம் உலகம் படத்தின் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தியேட்டர் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறாராம் ஆர்யா. சம்பளத்திற்கு பதிலாகவா என்றெல்லாம் கேட்டு அவரை தர்மசங்கடப்படுத்த நமக்கு விருப்பமில்லை. சம்பளத்தை விட நாலு மடங்கு லாபம் சம்பாதிக்க வாழ்த்துவோமாக!

Arya turns to International distribution

Actor Arya who is basking the glory of back to back to back hits of Raja Rani and Arrambam, has turned to distribution. He is already a producer and now he started distribution of films, that too for International arena. Though it is not clear if he has acquired the theatrical rights as part of his salary, it seems to be a well thought out strategy to have a strong grip in his profession. We hear, he has acquired the theatrical rights for Malaysia and Singapore, for his film, Irandam Ulagam, directed by Selvaraghavan. PVP Cinemas, the producers of Irandam Ulagam are quite popular in distribution line in southern grid, and perhaps this being the reason for Arya not able to get any local rights.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆடியோ விழாவில் அவமானப்படுத்தப் பட்டாரா சூர்யா?

    e சபை ஒழுங்கு (புரோட்டோகால்) என்பது அரசு விழாக்களுக்கு மட்டுமல்ல, சினிமா விழாக்களுக்கும் பொருந்தும். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய ராதாரவி, ‘அமெரிக்காவில்...

Close