இழுத்து வச்சு இம்சை கொடுக்கறதுன்னா இதுதானா?

இழுத்து வச்சு இம்சை கொடுக்கறதுன்னா இதுதான் போலிருக்கு. தெலுங்கிலிருக்கும் பிரபல சேனல் ஒன்று காஜல் அகர்வாலை பேட்டியெடுத்தது. அப்போது தர்மசங்கடமான ஒரு கேள்வியை கேட்டார்களாம். இப்ப நடிச்சுட்டு இருக்கிற நடிகைகளில் யாரை ரிட்டையர்மென்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பலாம்? இதுதான் கேள்வி. ஐயோ… இப்படியெல்லாம் கேட்டு வம்புல மாட்டி விட்றாதீங்க என்று ஒதுங்கிப் போனாலும், அவர்கள் விடுவதாக இல்லை. மைக்கை நோஸ் -க்கு நேரே நீட்டிக் கொண்டேயிருந்தார்கள். தவிர்க்க முடியாமல் அந்த பதிலை சொன்னார் காஜல்.

வேணும்னா ஸ்ரேயாவுக்கு ரிட்டையர்மென்ட் கொடுக்கலாம்…! இதுதான் காஜல் சொன்ன பதில். இதை கேள்விப்பட்ட ஸ்ரேயா, கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு மறுபடி வாய்ப்பு வேட்டையில் இறங்க, கண்ணெதிரே அதிர்ஷ்டம். பாலா படத்தில் அவர்தான் நாயகி. ஆனால் இவரை வீட்டுக்கு போக சொன்ன காஜலுக்குதான் இப்போது தமிழிலும் படமில்லை. தெலுங்கிலும் தள்ளாட்டமாம்.

அவரு மட்டம், இவரு மட்டம்னு சொல்லிட்டு தானே தரை மட்டம் ஆகுறதுங்கறது இதுதான் போலிருக்கு!

Kajal Aggarwal’s interview put her in problems

Recently a popular TV Channel from Andhra telecast an interview with Shreya in which she has encountered a problem. She was asked which heroine can take retirement now by the anchor. She avoided the question initially, but the anchor persisted. She uttered the name Shreya. Obviously Shreya was hurt by her tongue-in-cheek response.

Earlier, Kajal while talking to press was eloquent on the Telugu film industry and she would never let the industry down come what may be, she was quoted as saying.

Now the situation is that Shreya is under consideration by director Bala to play the female lead in his film, apart from couple of films she is doing currently. In the case of Kajal while the Tamil film makers are having an unofficial ban, she finds it difficult to get good offers in Telugu field too.

When you are flying high, your heart should be firmly grounded, else the repercussion will be damaging.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கண்டிப்பாரா அமீர்? எல்லைமீறும் பெப்ஸி தொழிலாளர் அராஜகம்

விட்டால், சினிமாக்காரங்க அவங்கவங்க வீட்ல வெந்நீர் வச்சாலும் அதுக்கும் பெப்ஸி அமைப்புல இருக்கிற சமையல்காரர் வந்துதான் அடுப்பேத்தணும் என்று கொடி பிடிப்பார்கள் போலிருக்கிறது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்...

Close