இவரல்லவோ பெண்…! நெகிழ வைத்த நடிகை
பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் பாலியல் பயில்வான்களுக்கு ஒரு பெண் தருகிற தண்டனைதான் மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் கதை. அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பெண்ணியவாதிகள் என்று பெயரெடுத்த சுஹாசினி, ஸ்ரீப்ரியா, ராதிகா போன்றோர் கூட, இலங்கையில் இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை பற்றி வாய் திறக்கவில்லை. இந்த ஆதங்கம் தமிழகத்தை சேர்ந்த பெண்ணியவாதிகளுக்கு இருக்க, தனது கொள்கையை தனது கல்யாணத்தில் நிரூபித்து, அட… இவரல்லவா பெண் என்று கர்வப்பட வைத்திருக்கிறார் நடிகை ரீமாகல்லீங்கல்.
தமிழில் யுவன் யுவதி என்ற படத்தில் அறிமுகமாகி அந்த ஒரு படத்திலேயே தமிழக எல்லையில் நோ என்ட்ரி போர்டுக்கு ஆளானவர் இவர். ஆனால் மலையாளத்தில் நல்லப்பட நடிகை என்று பெயர் வாங்கி வைத்திருக்கிறார். இவருக்கும் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில்தான் தனது புரட்சியை உலகுக்கு அறிவித்திருக்கிறார் அவர்.
நாட்டில் பல லட்சக்கணக்கான பெண்கள் திருமணத்தில் தங்க நகை போட முடியாமலே கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பலருடைய திருமண வாழ்விலும் தங்கம் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதை கண்டிக்கும் விதத்தில் ஒரு பொட்டு தங்கம் கூட அணிந்து கொள்ளாமல் தனது திருமணத்தை நிகழ்த்தியிருக்கிறார். அது மட்டுமல்ல, மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் ஆடம்பர செலவையும் மிச்சம் பிடித்து அதை புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
கேரள சேச்சியாக இருந்தாலும், ஆச்சி…. என்று ஆதரவோடு அகமகிழ தோன்றுகிறது. ஒரு எட்டு தமிழ்நாட்டுக்கு சோடியா வந்துட்டு போ தாயீ…!
Rima Kallingal shows simplicity in her wedding
Yuvan Yuvathi girl Rima Kallingal who fell in love with the director Ashiq Abu during their shoot of Female 22 Kottayam, tied the knot with the director in a simple wedding. The couple tied the knot at sub registrar office at Thrikkakkara in Kochi. Rima during her wedding avoided wearing gold jewellery. She also along with Ashiq decided to do away grand celebrations of the wedding, and instead donated Rs.10 lakhs towards cost of medication for cancer patients at government hospital. This noble gesture was received from everyone, including former Justice VR Krishna Iyer. We wish her a very happy and successful married life.