என்னை கமல் கவனிக்கிறார் – சூர்யா

ஆனந்த விகடனில் ‘வட்டியும் முதலும்’ என்ற தொடரை எழுதி, தமிழ் படிக்கும் எல்லா நெஞ்சங்களிலும் நிறைந்தவர் ராஜு முருகன். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பல காலம் தவமிருந்த அவருக்கு, இது பொங்கலோ பொங்கல் காலம். அவர் இயக்கிய குக்கூ… படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடந்தது. அதுவும் கமல்ஹாசன் வெளியிட, சூர்யா பெற்றுக் கொண்டார். இந்த படத்தின் பாடல்களையும் ட்ரெய்லரையும் பார்த்த சூர்யா, ராஜுமுருகனை பாராட்டும் விதத்தில் அரங்கத்தில் தலைகுனிந்து வணங்கினார். (ஒரு எழுத்தாளனுக்கும் சேர்த்து கிடைத்த மரியாதை இது)

சூர்யா பேசும்போது, ‘குக்கூ’ மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும். இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும். கமல் எனக்கு அண்ணன். நான் வித்தியாசமான படங்கள் எல்லாம் பண்ணுகிறேன் என்றால் அதற்கு காரணம் அவர்தான். நான் என்ன பண்ணுகிறேன் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவரை பின்பற்றித்தான் நான் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றார்.

கமல் பேசும்போது, சூர்யா என்னை அண்ணன் என்று சொன்னார். அவரை நான் கவனித்து வருகிறேன் என்றும் சொன்னார். அது எல்லாமே உண்மைதான். ஆனால், சூர்யா தனிமையில் இருக்கும்போது மட்டும்தான் அவருக்கு நான் அண்ணன். அவருடைய அப்பா சிவகுமாருடன் அவர் இருக்கும்போது நான் அவருக்கு சித்தப்பாவாகத்தான் இருப்பேன். பொதுவாக எனக்கு இரட்டை வேடங்களில் நடிக்க ரொம்பவும் பிடிக்கும். சூர்யா விஷயத்தில் நான் இரண்டு வேடத்தில் இருப்பது ரொம்பவும் மகிழ்ச்சி என்றார்.

ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியேறியவர்களும், ரசிகர்களும் பாராட்டி பேசிக் கொண்டே கலைந்தது ஆச்சர்யம் என்றால், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இது பற்றிய பாசிட்டிவான விமர்சனங்களையும் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக வேறெந்த படத்திற்கும் இப்படியொரு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Kamal and Suriya shared a lively conversation

Kamal Hassan and Suriya were amongst the guests who adorned the stage during the trailer and audio launch of Cuckoo.

Speaking on the occasion Suriya has said that film such as Cuckoo receives more applause than big heroes’ films. While he congratulated and bowed down for the efforts of all the artistes and technicians he urged that new talents in Tamil film industry are a good augury. He further said that he follows the footsteps of Kamal Hassan who he would call him as elder brother, as it gives more intimacy.

Kamal during his speech responded to Suriya’s remarks saying that he would always watch Kamal’s growth at a distance, because he was also ‘Chithappa’ to him. But Suriya would call me ‘chithappa’ only when his father Sivakumar is around, which made the entire audience burst into wholehearted laughter. I love doing dual roles in films, but in Suriya’s case I like the dual roles I play for him, he added in lighter vein.

The trailer of Cuckoo and the songs which were screened during the occasion received whole hearted applause and appreciation not only from the audience present, but also in the social networking sites face book and twitter, with fans posting positive comments about the songs and the trailer, which is a welcome sign for the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆந்திரா மெஸ்சில் ஒரு கோங்குரா சட்னி

ஒரு படத்தின் தலைப்புதான் அட... என்பதற்கும், அட போங்கப்பா... என்பதற்குமான உத்வேகத்தை கொடுக்கிறது. அந்த வகையில் ‘ஆந்திரா மெஸ்’ என்கிற தலைப்பு எந்த ரகம் என்பதை வாசகர்களே...

Close