எமி பேசும் சென்னை தமிழ்! இது ஐ பட அட்ராசிட்டி

ஐ என்று அழகு காட்டிக் கொண்டிருந்த எமிக்கு விடுதலை விடுதலை விடுதலை… தண்ணியடிக்கக் கூடாது. பார்ட்டிக்கு போக கூடாது. முன்நேரத்தில் உறங்கணும். அதிகாலையில் விழிக்கணும். யோகா கட்டாயம். ஸ்கிப்பிங் முக்கியம் என்றெல்லாம் எமிக்கு ஒரு டஜன் உத்தரவுகளை போட்டு, அதையெல்லாம் கடைபிடிக்கிறாரா என்று நோட்டம் பார்க்க ஆள் போட்டு அமர்க்களம் பண்ணிவிட்டார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்.

ஐ படப்பிடிப்பு முடிந்தது. கிளியின் கூண்டுகள் திறந்தது. இருந்தாலும் இந்த நல்ல பழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை எமி. ஏன்? இவற்றையெல்லாம் கடைபிடித்தால் உடம்பு எப்படி லேசாக இருக்கும் என்பதை அனுபவித்துவிட்டாரே?

அது போகட்டும்… முக்கியமான மேட்டர். ஐ படத்தில் சென்னை தமிழில் பேசியிருக்கிறாராம் எமி. பேசியிருக்கிறார் என்றால் இவரா பேசுவார்? இவருக்கு பதிலாக வேறொருவர் பேசப் போகிறார். ஆனால் ஷாட்டின்போது உதட்டை சென்னை தமிழுக்கு ஏற்றவாறு அசைக்க வேண்டுமல்லவா? பெண்டு நிமிர்த்தி விட்டாராம் ஷங்கர். எப்படியோ சென்னை தமிழை மென்று முழுங்கிவிட்டார் எமி. இப்போது டப்பிங் பேச பொருத்தமான ஆளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட சிறப்பான மேட்டர், சென்னையில் முக்கியமான குப்பங்களுக்கு எல்லாம் விசிட் அடித்து, அங்கு சென்னை தமிழில் ரவுசு காட்டும் மக்களின் குரலை அவர்களுக்கு தெரியாமலே டேப் செய்து கொண்டிருக்கிறார்கள் ஷங்கரின் உதவியாளர்கள்.

இந்த ஸ்டைலில்தான் பேசுவாராம் எமிக்காக டப்பிங் பேசுகிறவர்.

இங்கிலீஷ் தக்காளி, சென்னை பப்பாளியாக மாறுவதை பார்க்க ஆசையாக இருக்கிறதே…. ஐ எப்பங்க வரும்?

Amy to speak in Chennai Tamil in Shankar’s ‘Ai’

The shoot of Amy’s portion in Shankar’s Ai has been completed and she is now free from the stringent diet and socializing conditions put by the director Shankar. When Shankar cast her in his film, he is said to have put lot of conditions on Amy, viz. no parties, no late night gossiping, rising early morning and practice yoga, no liquor, and practice skipping daily, etc. Though Amy is free to indulge in those things now, she is said to be following the same schedules as she finds them keep her fit.

Another interesting feature is that Amy is said to be speaking in Chennai Tamil in the film. For this the director made her to learn the language so that her lip movements synchronize with the dubbing. The director is now looking for dubbing artiste who can speak Chennai Tamil as spoken in the slums. For this he has asked his assistant to record the how the people speak in slums without their knowledge, to help the dubbing artiste to speak on those rhythm and tone.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மலேசியாவுக்கு செல்ல முடியாத இசைஞானி இளையராஜா தன் ரசிகர்களிடம் வீடியோவில் பேசிய சில உருக்கமான வார்த்தைகள்…

http://youtu.be/0iGHrEEnm5w

Close