எவ்வளவு வேணும்னாலும் தர்றோம்… பட், ரஜினி கையெழுத்து போடுவாரா?
அந்த பரமேஸ்வரனே படம் எடுக்க வந்தால் கூட, சந்துல ஒளிய இடம் கிடைக்குமா என்று தேட வைத்துவிடும் கோடம்பாக்கம். பணம் போடுகிற முதலாளியை பந்தாடுகிற ஒரே இடம் தமிழ்சினிமாதான். இதற்கு உதாரணமாக இங்கே பல முதலாளிகளை கூறலாம். அவர்களும் சே… போதும்டா இந்த பொழப்பு என்று போட்டது போட்டபடி ஓடிய கதைகளும் நிறைய உண்டு. ஆணானப்பட்டவர்களையே ஆலைக் கரும்பாக பிழிந்து எடுத்துவிடும் வட்டி பிரச்சனைகளும், வாய் ஜால தொந்தரவுகளும் சௌந்தர்யாவை மட்டும் சும்மா விட்டுவிடுமா?
அவரும் சிக்கி கொண்டு தவிக்கிறாராம். தற்போது கோச்சடையான் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் சீனாவில் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்குதான் தங்கியிருக்கிறார் சௌந்தர்யா. டிசம்பர் 10 ந் தேதிதான் அவர் சென்னை திரும்ப இருக்கிறாராம். இதற்கிடையில் படத்தை வெளியிட வேண்டும் என்றால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் பில்களை செட்டில் செய்தாக வேண்டும். இதற்கே பல கோடிகள் தேவைப்படுகிறதாம். தனது முயற்சியில் அங்கிருந்து இந்தியாவிலிருக்கும் சில முக்கியமான பைனான்சியர்களை அவர் தொடர்பு கொண்டதாகவும், ஆயிரம் கோடி வேணும்னாலும் தர்றோம். பட்… ரஜினி சார் கையெழுத்து போடணும். வாங்கி தர்றீங்களா என்கிறார்களாம் அவர்கள்.
பில்களை செட்டில் செய்யாமல் படத்தை முழுமையாக்கி பார்க்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கும் சௌந்தர்யா, என்ன செய்யப் போகிறார் என்பதுதான் ரஜினி பட கிளைமாக்சை விடவும் பரபரப்பான விஷயமாக இருக்கிறது என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சினிமா முக்கியஸ்தர்கள். படத்தை ஏப்ரலுக்கு தள்ளி வைத்ததும் இதன் காரணமாகதானாம்.
அதற்குள் சௌந்தர்யாவுக்கு அந்த கோச்சடையான்தான் வழிகாட்ட வேண்டும்.
Kochadaiiyaan release pushed to April?
Kochadaiiyaan gets free publicity by way of making news practically for every alternate day. There were so many unconfirmed news bits which were converted as news headlines only to find they are denied or not happening. Recently one such news made headlines despite its origin was pointed to the reported statement of one of its co-producers Murali Manohar who said that the film would be released for Pongal, thus making everyone by surprise. Even the theatre owners were reportedly hesitant to accept Ajith or Vijay film for Pongal.
However persons who are in the know and who do not wish to be named say that the real issue is settling of various bills of creditors before the release of the film. Soundarya Ashwin who is currently in China overseeing the graphic works that are being done there, has reportedly contacted some of her known financiers to resolve the issue. But she was clearly told that they are ready to pay any amount of money, if Rajini signs. Though as a daughter Soundarya certainly would not like to mortgage her father’s reputation, Rajini on the other hand would not like to see his daughter’s career gets spoiled at the nascent stage.
How father and daughter would help each other in releasing the film is the question doing rounds in Kollywood at present.