ஏன் போகவில்லை ஹன்சிகா?
தனது ட்விட்டரில் வெளிவந்த படங்கள் பற்றி காரசாரமாக பேட்டியளித்திருந்தார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் அணைத்துக் கொண்டிருப்பதை போன்ற காட்சிதான் அது. ‘இந்த படங்கள் நாங்கள் இருவரும் பர்சனலாக எடுத்துக் கொண்டவை. அதை என் அனுமதியில்லாமல் யாரோ வெளியிட்டிருக்கிறார்கள்’ இதுதான் ஹன்சிகாவின் ஆவேசமான பேட்டி. இப்படி வெளியிட்டது யாரென்று கண்டு பிடிக்க கேட்டு போலீசிடம் புகார் கொடுக்கப் போவதாகவும் அப்பேட்டியில் சொல்லியிருந்தார் அவர். ஆனால் பேட்டியளித்து முழுசாக ரெண்டு நாளாகிவிட்டது. கமிஷனர் ஆபிஸ் பக்கம் ஹன்சிகாவும் போகவில்லை. அட்லீஸ்ட் அவரது மேனேஜராவது தென்படுவார் என்றால் அதுவும் இல்லை. இவரது திடீர் அமைதிக்கு என்ன காரணமாக இருக்கும்?