‘ஐஸ்வர்யா தங்கையோ ஆல் இன் ஆல் மங்கையோ

தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லை

சிவாஜிக்கும் பாடல்கள்எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று விக்ரம்பிரபுவுக்கும் எழுதிவருகிறார். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சேரனுக்கும் எழுதியவர், இன்று அறிமுகமாகும் புதிய இயக்குநருக்கும் எழுதி வருகிறார்.  அப்படித்தான்அறிமுக இயக்குநர் ஏ. கேசவன் இயக்கியுள்ள’அவளுக் கென்ன அழகிய முகம்’ படத்துக்கும் எழுதியுள்ளார்.

எம்.எஸ். கதிரவன் என்கிற  பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர்  22 வயதில் தயாரித்துள்ளார்.. காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்பதுதான் கதை.இது காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம்.

இப்படத்தில் 5 பாடல்களையும் வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு நிறத்தில் வெவ்வேறு குணச்சித்திரத்தில் எழுதி கலக்கியுள்ளார் வைரமுத்து
.
இதோ அந்தப்பாடல்கள் பற்றிய விவரம்

பாடல்-1
காதலில் தோற்றவர்கள் பாடும் பாடல் இது.
‘ஒரு பெண்ணைக் காதலித்தோம் ஒரு தலையாய் காதலித்தோம்
காதலிலே தோற்றவரெல்லாம் ஒன்றாய்க் கூடிவிட்டோம்’என்று தொடங்கும் பாடல்.

பாடியுள்ளவர்கள் ஆலப்ராஜ் ,சூரஜ் சந்தோஷ்.

பாடல்-2

நாயகன் கோவைக்கார பாவையான தன் காதலியை எண்ணிப் பாடும் பாடல் இது.கோவையையும் ஒரு பாவையையும் ஒப்புமைப் படுத்தி எழுதியுள்ள பாடல் இது.

‘ஐஸ்வர்யா தங்கையோ ஆல் இன் ஆல் மங்கையோ
ஆரெஸ்புரம் வீதியில் வந்தாடுதோ’

என்பது பாடல் .
வேல் முருகன் பாடியுள்ளார்.

பாடல்-3

இது ஒரு  காதல்பாடல்
‘அக்டோபர் ஏழு ஆனந்த தேதி
ஐலவ்யூ சொன்னான் கூந்தலைக் கோதி’

ராகுல் நம்பியார், சின்மயி பாடியுள்ளனார்.

பாடல்-4

காதலையும் அம்மா பாசத்தையும் கலந்து எழுதப் பட்டுள்ள பாடல்.
யாதுமாகி நிற்கும் காதலி ‘தாயுமானவள்’ ஆகி ஆறுதலாகப் பாடும் பாடல் இது.

‘என்னடா கண்ணா ஏனிந்த கண்ணீர்?
நானுந்தன் தாயல்லவா? ‘

இந்தப்பாடலை சந்திரலேகா  அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளனர்.இப்பாடலைப்பாட புதுக்குரல் தேடிய போது கிடைத்தவர் தான் சந்திரலேகா, இவர் இப்போது உலகம் முழுக்க பிரபலமாகியுள்ள மலையாளக்குயில். வீட்டுக்குள் ஆர்வத்தில் சமையலறையில் பாடிக் கொண்டிருந்தவரின் ஒரு பாடலைப்பதிவு செய்து யூடியூப்பில் ஒலிபரப்ப,. அவர் பிரபலமாகி இப்போது உலகம் சுற்றுகிறார். விஐபிக்கள் முதல்வர் வரை இவர் வீட்டுக்கு விசிட் அடித்து விட்டார்கள் அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.

பாடல்-5
‘டோலு டோலு அஞ்சுபேரு நாங்க ஒரு பஞ்சபூதந்தானுங்க
எங்க நெஞ்சில் வஞ்சமில்லை அஞ்சுபேரு நாங்க’

இது நண்பர் ஐவர் பாடும் பாடல். ரஞ்சித் குழுவினர் பாடியுள்ளனர்.இதில் பல பழமொழிகளைப் பயன்படுத்தி பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. சூழலுக்கு சூழல்.. பழமொழிக்குப் பழமொழி.. என புதுவித அனுபவம்.

இப்படத்தில் நடிப்பவர்கள் பலரும் புதியவர்கள். பூவரசன், விஜய்கார்த்திக், விக்கிஆதித்யா, சபரி என நான்குபேர் நாயகர்களாக  அறிமுகமாகிறார்கள். பிரதான நாயகியாக டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் அறிமுகமாக ரூபாஸ்ரீ. சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.பவர்ஸ்டார் சீனிவாசனும் இருக்கிறார்.

கதைக்களம் கோவை என்றாலும் மதுரைக்குக் கதை பயணிக்கிறது.
கோவை,மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்துக்கு ஒளிப்பதிவு நவநீதன். இசை டேவிட் ஷார்ன். இவர் மலையாளம், இந்தியில் ஆல்பங்கள் இசையமைத்தவர். படத்தொகுப்பு. கோபிகிருஷ்ணா, நடனம்: ஷங்கர், ஸ்டண்ட்: எஸ்.ஆர்.முகேஷ், கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி.

தயாரிப்பு மேற்பார்வை: அன்பு செல்வன், கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில்  எம்.எஸ். கதிரவன்  தயாரிக்கும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’  இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக உருவாகி வருகிறது.

Read previous post:
மிரட்டும் ஆவி கோலத்தில் சூர்யா

Close