கமல் படத்தில் ரஜினி? கல்லாவை நிரப்ப புது திட்டம்!

அஜீத்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா? கமலும் ரஜினியும் சேர்ந்து நடிப்பார்களா? ஷகிலாவும் மம்முட்டியும் சேர்ந்து சேர்ந்து நடிப்பார்களா? என்று ஓராயிரம் கேள்விகளை மனதில் போட்டு உழப்பிக் கொண்டேயிருக்கிறான் தமிழன். இதில் யார் யார் கூட சேர்ந்து நடித்தாலும் வெல்லக்கட்டியில் செய்த வெல்வெட் மிட்டாயாக அதை கருதி ரசிக்கவும் ருசிக்கவும் அவன் துடித்துக் கொண்டிருக்கிறான். அந்த நம்பிக்கையில் ஒரு புதிய திட்டத்தை வகுத்திருக்கிறாராம் கமல்.

அவர் நடிக்கவிருக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தில் ரஜினியையும் ஒரு காட்சியில் நடிக்க வைப்பதுதான் அந்த திட்டம். சுமார் 42 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தை பரபரப்பாக்கிவிட தலைகீழாக குட்டிக்கரணம் போட்டால்தான் உண்டு. ரஜினியை நடிக்க வைத்தால்? அதுவே உலகம் முழுக்கவிருக்கிற தமிழர்களை உசுப்பிவிடும் என்பது அவருக்கு தெரியாதா என்ன? படத்தில் ஒரு வீடியோ கான்பரன்சிங் காட்சி வருகிறதாம். அதில்தான் ரஜினி தோன்றப் போகிறார்.

இந்த படத்தில் ரஜினி கமல் இருவருக்கும் குருநாதராக விளங்கிக் கொண்டிருக்கும் பாலசந்தரும் நடிக்கிறார் அல்லவா? இதையே துண்டிலாக வைத்து ரஜினியை வளைக்கப் போகிறார்களாம். கிட்டதட்ட ரஜினியும் இந்த திட்டத்திற்கு ஓ.கே சொல்லிவிட்டதாக கேள்வி.

Uthama Villain gets a prized catch!

Kamal’s Uthama Villain is making all necessary sound bites more than Kamal’s yet to be released Vishwaroopam 2. With many information passed on to the media on daily basis the curiosity of the audience and Kamal’s fans is bound to surge.

Now we have additional information about the film. The film makers have a prized catch to make the film zoom out across the globe.

Though the second generation audience have seen Rajini and Kamal acting together, the third generation did not have the opportunity to see them together in a film that is made in latest environment. Kamal will be fulfilling their desire while at the same time the film would bring in sufficient collections to the makers at the box office.

Yes, Kamal and Rajini will be seen in Uthama Villain. It is said that though they may not appear in the scene side by side, they will appear in a video conferencing scene in which both Kamal and Rajini share some information. K. Balachandar the mentor for both seems to have played a role roping in Rajini in the film. Rajini too has given in principle nod to K. Balachandar and his best buddy Kamal.

Is it not sufficient for the Box Office ringing in with pouring collections?

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Hello Yaarathu Kadavulaa – Kerala Naatilam Pengaludane Video Song

http://www.youtube.com/watch?v=nzdXal44XBo

Close