கவர்ச்சி நடிகையை ஓடவிட்ட சிரிப்பு நடிகர்…

 

 

நல்லவேளை… வாங்கிய சம்பளம் மொத்தத்தையும் பினாயில் பேக்டரிக்கே கொடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருப்பார் கவர்ச்சி ஆக்ட்ரஸ் ரகசியா. யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடனும், அதற்கு முந்தைய காலத்தில் ஆணானப்பட்ட கமலுடனும் ஆடிய இவருக்கு அண்மைக்காலமாக வந்திருக்கும் தொழில் சறுக்கல்…. ரொம்பவே மோசம்.

சமீபத்தில் ஒரு படத்தில் கருணாசுடன் தாறுமாறாக ஆட வேண்டிய சுச்சுவேஷன்…. அதை சகித்துக் கொண்டு ஆடி முடித்தார். அதற்கப்புறம் ஒரு கேரக்டர் ரோலே காத்திருக்கு. வாங்க என்றாராம் டைரக்டர் கோபி. இவரும் நம்ம்ம்ம்ம்பி போனால், இவருடன் ஜோடியாக நடிப்பவர் கஞ்சா கருப்பு என்ற தகவல் அப்புறம்தான் தெரிந்ததாம். வேல்முருகன் போர்வெல் என்ற படத்திற்காகதான் இந்த அழைப்பு.

தமிழ்சினிமாவில் நம்முடைய ரேஞ்ச் இவ்வளவு சுருக்கத்தில் வந்து சுருக்கு போட்டுக் கொள்ளும் என்று நினைத்ததேயில்லை அவர். இருந்தாலும் வாங்குற சம்பளம் கார் பெட்ரோலுக்காவது ஆவுமே என்று இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

தானமா வந்த ஆட்டுகுட்டிய ஓரமா நிக்க வைச்சு உதைச்ச கதையா, ஒரு முக்கியமான சீன்ல நீங்க கண்டிப்பா நடிச்சாகணும் என்று கண்டிஷன் போட்டாராம் கோபி. அவ்வளவு கஷ்டமான நடிப்புன்னு ஒண்ணு இருக்கா என்று சந்தேகப்பட்ட ரகசியா, என்னவென்று கேட்க… விழுந்தது இடி. நீங்க கஞ்சா கருப்புக்கு லிப் கிஸ் கொடுக்கணும் என்றாராம் டைரக்டர்.

மயக்கம் வராத குறையாக அதிர்ச்சியாகிவிட்ட ரகசியா அந்த ஒரு வினாடியில் சினிமாவுலகத்தை விட்டே விலகிவிடலாமா என்று கூட யோசித்தாராம். இருந்தாலும் படப்பிடிப்பிலிருந்து அவர் விருட்டென வெளியேற பதறியடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடினாராம் டைரக்டர் கோபி. அப்புறமென்ன…? கெஞ்சி கூத்தாடி நெற்றியில் மட்டும் அவரை முத்தமிட அனுமதிக்கணும் என்கிற அளவில் முடிந்தது பஞ்சாயத்து.

Ganja Karuppu turns villain in the sets

Ganja Karuppu, the comedy actor turned producer with Velmurugan Borewells in which he play one of the leads, directed by Gopi. Ragasiya, who shook legs with Karunas in his latest film, was roped in to play an important role in the film.  However during the shoot Ganja Karuppu turned villain by enacting a kissing scene on Ragasiya. Enraged the actress left the floors to the bewilderment of the unit including the director. The director later said Ganja Karuppu did not kiss the actress. She left the floors abruptly, when he was asking her to act in a lip-lock scene with Ganja Karuppu. Later the actress manager was called in and the issue was settled after the talk. The director has changed the scene where the comedian had to kiss Ragasiya on her forehead gently. The scene was shot without any further hitch, and the rest of the portions are going on smoothly.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காலேஜுக்கு நடந்தே போவாராம்… – பிரபல ஹீரோவுக்கு தயாரிப்பாளர் பாராட்டு

    பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனின் தங்கை வீட்டில் தங்கிதான் படித்தாராம் விக்ரம் குமார். இந்த ‘கும்கி’ குமாரின் அடக்கம் பற்றி அப்படி சிலாகிக்கிறார் தியாகராஜன்....

Close