கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பாராட்டுவிழா
எத்தனை பாடலாசிரியர்கள் வந்தாலும் தனக்கான இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றி வருகிறார் கவிஞர் வைரமுத்து. சமீபத்தில் வெளிவந்த இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களில் வைரமுத்துவின் வரிகளை சிலாகித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். ‘உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி…’ என்றொரு வரியை இவர் எழுதியிருக்கிறார்.
இந்த பாடலை எழுதி முடித்தவுடனேயே அவரே வியந்து போனராம். தன்னை தேடி வந்த பத்திரிகையாளர்களிடம் இந்த வரியை சொல்லி ‘எப்படியிருக்கு?’ என்று கேட்டாராம். அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. பாடலின் ட்யூனும் இவரது வரிகளும் பெரும் மயக்கத்தை ஏற்படுத்த, காலர் ட்யூனுக்காக டவுன் லோட் செய்யட்டவர்களின் எண்ணிக்கையே இதுவரை லட்சத்தை தாண்டிவிட்டதாக தகவல் வருகிறது.
இவ்வளவு சிறப்பான ஒரு பாடலாசிரியருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று எவருக்காவது தோன்றியதா? உயிர் சாமி இயக்கும் கங்காரு படத்தின் தயாரிப்பாளருக்கு தோன்றியிருக்கிறது. ஐயா…. நீங்க வேணாம்னு மறுக்கக் கூடாது. உங்களுக்காக நான் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்யப் போகிறேன். நீங்க அதுக்கு ஒத்துக்கணும் என்றாராம். இதற்காகவே காத்திருந்த மாதிரி சம்மதமும் சொல்லிவிட்டாராம் கவிப்பேரரசு.
ஷங்கர், மணிரத்னமெல்லாம் கலந்துக்காமலா இருக்கப் போறாங்க?
