குத்து ரம்யாவை தொடர்ந்து புவனேஸ்வரியும் ‘தொபுக்கடீர்…’
‘தொபுக்கடீர் ’ என்று அரசியலில் குதித்த குத்து ரம்யா, இப்போது மெம்பர் ஆஃப் பார்லிமென்ட். இந்த பலகார ருசிக்கு நிகரான தகவலை கேட்ட மாத்திரத்திலேயே வாய் ஊறியிருக்கிறது இங்குள்ள பல நடிகைகளுக்கு. அவரை விட வேகமானதொரு தொபுக்கடீருக்கு தயாராகி வருகிறார்கள். இவர்களின் தேமதுர தமிழை சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ ஒலிக்க வைக்காமல் விடக் கூடாது என்று தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன.
கன்னடத்தில் ரம்யா, ஆந்திராவில் ரோஜா, தமிழ்நாட்டில் நானாக்கும் என்று தன் முண்டாவை வலுவாக்கிக் காட்ட துவங்கியிருக்கிறார் நமீதா. மெல்ல மெல்ல தன் மனதிலிருக்கும் அரசியல் ஆசையை தற்போது வீதிக்கு கொண்டு வந்திருக்கும் அவர், எந்த கட்சியில் சேர்வது என்பதையே இன்னும் முடிவு செய்யவில்லையாம். அவரது அழகுக்கும் உயரத்திற்கும் அவர் நரேந்திர மோடியை செலக்ட் செய்து அக்கட்சியில் இணைவார் என்றே தெரிகிறது. இத்தனைக்கும் இருவரும் ஒரே மாநிலக்காரர்கள்.
நமீதாவின் ஆசை அப்படியென்றால், பூனை கண் அழகி புவனேஸ்வரிக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. தன் மீதிருக்கும் வழக்குகளை நீர்த்துப் போக செய்ய வேண்டும் என்றால், அதற்கு அரசியல் பலம் கண்டிப்பாக வேண்டும். அதே நேரத்தில் பொதுசேவை என்பது இவருக்கு புதிதில்லை அல்லவா? புவனேஸ்வரி அரசியலில் இறங்க நேரம் குறித்துவிட்டாலும், எந்த கட்சியில் சேர்வது என்பதை இன்னும் முடிவே செய்யவில்லையாம்.
எந்த கரை புடவை கட்டினால் உங்களுக்கு மேட்ச் ஆக இருக்குமோ, அந்த கட்சியில் சேர்ந்திட வேண்டியதுதானே?