கேட்டதும் கொடுப்பவரே மணிஷா மணிஷா… முத்த விவகாரத்தில் மூச்சடைத்த இயக்குனர்

வேறெந்த நடிகைக்கும் வாய்க்காத பெரும் பேறு அது. அதை சுலபத்தில் தட்டிக் கொண்டார் மணிஷா. வழக்கு எண் படத்தில் அறிமுகமாகி நாலைந்து படங்களில் நடித்திருந்தாலும், ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா’ பட இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் தந்த பாராட்டு பதக்கத்தை அவர் காலம் முழுக்க நெஞ்சில் குத்திக் கொண்டு திரியலாம். அது அந்தளவுக்கு வேல்யூவானது. விட்டால் ‘தாயீ… நீதான் மகமாயீ’ என்றெல்லாம் கூட அவர் புகழ்பாடி மகிழ்ந்திருப்பார். அதில் ஒன்றும் தப்பில்லை. ஏனென்றால் இந்த பேராசை உலகத்தில், ‘கொடுக்கறதை கொடுங்க. நடிக்கறது என் வேலை’ என்று ஒரு நடிகை, அதுவும் வெற்றிப்படங்களில் நடித்த நடிகை சொல்வாரா? சொன்னார் மணிஷா.

பட்டைய கிளப்பணும் பாண்டியா படத்தில் நடிக்க விதார்த்தையும் சூரியையும் கமிட் செய்துவிட்டார் டைரக்டர் எஸ்.பி.ராஜ்குமார். அவரை பொறுத்தவரை அது பெரிய வேலையில்லை. ஏனென்றால் இவரும், விதார்த்தும், சூரியும் ஒரு காலத்தில் ஒரே குடித்தனத்தில் அடுத்தடுத்த அறைகளில் குடியிருந்தவர்கள். சினிமாவில் வெற்றி பெறுவதற்கு முன்பே ஃபிரண்ட்ஸ். படத்தின் நாயகியை தேடி நெடும்பயணம் நடத்தினாராம் டைரக்டர். பிந்து மாதவி, ஓவியா, என்று அலைந்த நேரத்தில் அவர்கள் கேட்ட சம்பளம் வயிற்றை கலக்கியதாம் இவருக்கு. அந்த நேரத்தில்தான் ‘மணிஷா என்னோட ஜன்னல் ஓரம் படத்தில் நடிச்சிருக்காங்க. ரொம்ப நல்லவங்க’ என்று அவரிடம் பேச சொல்லியிருக்கிறார் விதார்த்.

பேசிவிட்டு நேரில் போன எஸ்.பி.ராஜ்குமாருக்கு ஷாக். நீங்க கொடுக்கறதை கொடுங்க. நான் நடிக்கிறேன். நல்ல கதையில் நான் இருக்கணும். அதுதான் முக்கியம் என்றாராம் மணிஷா. அதற்கப்புறம் படப்பிடிப்பில் இன்னொரு விஷயத்திற்கும் யோசிக்காமல் ‘யெஸ்’ சொல்லியிருக்கிறார். ஒரு பாட்டு முழுக்க நீங்க விதார்த்துக்கு முத்தம் கொடுத்துகிட்டேயிருக்கணும் என்று தயங்கி தயங்கி கேட்டாராம் டைரக்டர். அதுக்கென்ன? கதைக்கு தேவைன்னுதானே கேட்கிறீங்க? செஞ்சுடுறேன் என்று கூறி அப்படியே செய்தாராம் மணிஷா.

நடிகைன்னா இவரல்லவோ நடிகை? மற்றவங்களும் இருக்காங்களே…

Manisha Yadav agreed to help director SP Rajkumar

SP Rajkumar who will be directing his film Pattaya Kilappanum Pandiya with Vidharth in the lead and Soori, was searching for a heroine for the film. He approached Bindu Madhavi and Oviya whose salary demands he could not meet was a worried man. It is when, Vidharth, close friend of the director from pre-entry to Kollywood days, suggested to him to approach Manisha, with whom he had earlier acted in Jannal Oram. Rajkumar on the advice of Vidharth met Manisha and narrated the script. She has agreed to do the film for the salary offered by the director, without any hesitation. She said that she wants to be seen in good films and salary is not a criteria, which came as a pleasant surprise to SP Rajkumar.

During the shoot of the film, Manisha has given one more surprise by acceding to the request of the director do kissing in a song sequence, to which Manisha instantly agreed saying, since the script demands she would do it.

Manisha though young seems to be matured enough to understand the nuances of coming up in life especially in film industry.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்போ அம்பி… இப்போ ஹீரோ

யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மொழிவது யாதெனில்’. முழுக்க முழுக்க...

Close