கேரளாவில் கிளி, தமிழ்நாட்டில் வலி

அப்பிடியிப்பிடி தோல்வியில்லை, நடிக்க வந்த காலத்திலிருந்தே அதை தவிர வேறொன்றும் அறியாதவர் ஹனிரோஸ். இத்தனைக்கும் அவரது அழகுக்கு முன்னால் முன்னணி நடிகைகள் கூட  பல்லிளித்துப் போவார்கள். ஆனால் விதியிருக்கிறதே விதி? அது சீட்டெடுக்கும் கிளியின் மூக்கில் கூட பிளாஸ்திரி போட தயங்காது.

அப்படிதான் போராடிக் கொண்டிருந்தார் ஹனிரோஸ். தனது பெயரை சவுந்தர்யா என்று மாற்றிக் கொண்டு சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த பிறகும், அந்த பிளாஸ்திரி நீக்கப்பட்டதாக இல்லை. எப்படியோ மீண்டும் சொந்த நாடான கேரளாவுக்கே ஒதுங்கியவருக்கு அடித்தது யோகம். இன்று ஐந்தாறு படங்கள் கையில். முன்னணி ஹீரோவான திலீப்புக்கு ஜோடி என்று அவரது வாழ்க்கையே திசை மாறிவிட்டது.

தமிழில் அவர் நடித்த காந்தர்வன் படத்தின் மீதி ஷுட்டிங்குக்காக அழைக்கிறார்களாம். போங்கய்யா… நீங்களும் உங்க தமிழ் படமும் என்கிறாராம் அவர்.

Honey Rose abandons Kollywood embraces Mollywood?

Pretty actress from Kerala, Honey Rose, who played the lead opposite to Jiva in Singam Puli, was not even acknowledged by Kollywood. Despite her handsome face and personality she could not make a beginning here. Felt hurt, she returned to Kerala film industry. Things have become rosy for Honey Rose as she has been signed for 5 films there including the film in which she plays opposite to popular hero Dileep.

The makers of ‘Kandharvan’, are persuading Honey Rose to come back to Kollywood to complete their film, but she shows little interest. It is always good to be popular in ‘home’ ground before venturing into other places.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆவின் பாக்கெட்டை கொடுத்துட்டு பசுமாட்டை ஓட்டிட்டு போற திட்டமா இருக்கே – ரஜினி அதிர்ச்சி

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று தனது டிஆர்பி லெவலை ஏற்றிக் கொள்வதற்காக சினிமா சம்பந்தப்பட்ட எத்தனையோ விஷயங்களை செய்து பார்த்தது. எதுவும் வொர்க்கவுட் நஹி. சிண்டை பிய்த்துக்...

Close