கோச்சடையான் ரிலீஸ்… உஷாரானார் ரஜினி

கோச்சடையான் ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது. ஆங்காங்கே வியாபாரத்தையும் ஸ்டார்ட் பண்ணிவிட்டார்கள். ஆனால் இந்த முறை ஆடு கழுத்தை கொடுக்க தயாராக இல்லை என்பதுதான் விநியோகஸ்தர்களின் அதிர்ச்சி.

படத்தில் புலியாக சீறினாலும், நிஜத்தில் ரஜினியை ஆடு போலாக்கி அவர் தலையில் மஞ்சள் தண்ணீரை ஊற்ற தயாராகிவிடுவார்கள் இந்த பொல்லாத விநியோகஸ்தர்கள். ரஜினி படம் வெளியாகும்போதெல்லாம் ‘என் தியேட்டர்ல இவ்வளவு கலெக்ஷ்ன் அவ்வளவு கலெக்ஷன்’ என்று பற்பசை விளம்பரம் போல போஸ் கொடுக்கும் அவர்கள், சரியாக 100 நாட்களுக்கு பிறகு நஷ்ட கணக்கோடு அவர் வீட்டு கதவை தட்டுவது வாடிக்கையாகிவிட்டது. அவர்கள் வரும்போதெல்லாம் பஞ்சாயத்து பேசி பல லட்சங்களை திருப்பி கொடுத்தும் வந்தார் அவர். ஆனால் இந்த முறை அந்த ‘டால்’ இங்கு வேகாது என்று கூறுகிற அளவுக்கு அவரை தள்ளிவிட்டிருக்கிறது விரக்தி.

ரஜினி படத்தை வெளியிட்டு கோடி கோடியாக சம்பாதித்தவர்கள், தேவைக்கு அதிகமான விலையை கொடுத்து வாங்கி, நஷ்டத்திற்குள்ளானதும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை விட்டுவிட்டு ரஜினியை குடைவது கொஞ்சம் கூட நியாயமில்லை என்று அதே விநியோகஸ்தர் கூட்டத்திலிருந்து நல்ல மனசுக்காரர்கள் குரல் கொடுத்தாலும் பிடுங்குகிற கூட்டம் திருந்தினால்தானே?

அதனால் இந்த முறை அக்ரிமென்ட் போடும்போதே தெளிவாக போட சொல்லியிருக்கிறாராம் ரஜினி. அதாவது படம் வெளியான பின்பு வரும் லாப நட்டங்களுக்கு ரஜினி பொறுப்பேற்க மாட்டார் என்பதுதான் அது. இதை கேள்விப்பட்ட விநியோகஸ்தர்கள் ‘பேஸ்த்’ அடித்து போயிருக்கிறார்களாம்.

Rajini’s precaution for Kochadaiiyaan distribution!

It has become almost routine for the theatre owners/distributors knocking the door of Rajini with account books, essaying that they had suffered losses screening his film. Rajini out of his magnanimity used to offer them compensation. This routine has happened, since last few films, despite his films were blockbusters and earned handsome profits.

Having learnt the truth bitterly, Rajini this time had asked the producers of his film Kochadaiiyaan to include a clause in the distribution agreement. He had suggested that whether the film is profitable or loss, Rajini will in no way responsible and would not enter in to any dialogues with distributors/theatre owners, for whatsoever be the reason.

This clause has now become the talking point with the distributors who are dismayed at the shock treatment Rajini has given.

1 Comment
  1. Mohanji. says

    good idea

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ZERIFA STILLS

[nggallery id=293]

Close