கோடம்பாக்கத்தில் ரகசியமாக சுற்றும் மற்றுமொரு லவ் ஜோடி…
குருட்டுப்பூனை இருட்டுல அலைஞ்ச மாதிரி, எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் கண்ணு முழிச்சாவது கவனிக்கிற வழக்கம் இருக்கு காதல் விவகாரத்தை. தமிழனின் இந்த தலையாய கடமையால் தடுமாறிப் போவது சாதாரண லவ் ஜோடிகள் மட்டுமல்ல, பிரபலமான நட்சத்திர ஜோடிகளும்தான்.
தமிழ்சினிமாவில் ஏரளமான லவ் ஜோடிகளின் கதையை உலகத்துக்கு அறிவித்து, அவர்களை ஒன்றாக சேர்த்து வைத்துவிட்டுதான் ஓய்ந்திருக்கிறது பிரஸ் உலகம். இவர்களின் கிசுகிசுக்களை முதலில் மறுத்தாலும், சில காலம் கழித்து ஒன்றாக வந்து இன்விடேஷன் வைக்கவும் மறக்காது அந்த ஜோடிகள். சினேகா பிரசன்னா வரைக்கும் இதே ஸ்டைல்தான் இங்கே.
இப்போது லேட்டஸ்ட்டாக இன்னொரு ஜோடியின் விவகாரம் லேசாக கிளம்பியிருக்கிறது. ‘வெளுத்துக்கட்டு’ படத்தில் அறிமுகமான அருந்ததிதான் அந்த காதலி. காதலன் யார்? பிரபல பாடகர் மனோவின் மகன் ஷாகீர். கடந்த சில மாதங்களாகவே இந்த ஜோடிகள் யாருக்கும் தெரியாமல் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்தே நடிக்கிறார்கள். இந்த சுற்றல் அனுபவங்களை ‘நாங்கள் நடிக்கும் காதல் படத்துக்கான ஹோம் வொர்க்’ என்று கூட இவர்கள் மறுக்கலாம்.
இருந்தாலும் ஷாதீர், அருந்ததியை வீட்டுக்கே முறைப்படி அழைத்து வந்து ஹோம் வொர்க் செய்ய வைக்கிற நேரம் வரும்போது… மற்றுமொரு கிசுகிசுக்கு மறுவாழ்வு கிடைத்ததாக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
Latest ‘love-birds’ in Kollywood!
Tamil Cinema has seen a number of love-birds, who sometimes go for the nuptial knots or may end in disagreement and disaster. Luckily the press here too most of the time try to unite the lovers with its one point agenda. So, the ‘love’ thrives more in Kollywood than in any other film industry, is in itself a welcome one! Why this prelude now? Yes, there is a news ‘one young love-birds’ are roaming around the city. Shakir, son of popular singer Mano, is seen partying and roaming around, together with Arundhathi, who got deputed with Veluthukattu in Tamil. The pair are likely to play lead in a forthcoming film. Perhaps a dress rehearsal or a reality?