சசிகுமாருடன் உரசல் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய சந்தானம்

சமீபகாலமாகவே டைரக்டர் மற்றும் நடிகர் சசிகுமாரின் நடவடிக்கைகள் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. சமீபத்தில் ஆனந்த விகடனில் அவர் அளித்த பேட்டியை சமூக வலைதள அன்பர்கள் சரியாக படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. படித்திருந்தால், சைக்கிள் பஞ்சரான விஷயத்தையும், கன்னுகுட்டிக்கு தொண்டை கட்டுன விஷயத்தையும் கூட பெரிதாக ஊதி பிரச்சனை கிளப்பும் இவர்கள், சசிகுமாரை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள். ஏனோ… சசிகுமாரின் ஸ்டேட்மென்ட்டை வடை மடிக்க கூட உதவாத ரகத்தில் சேர்த்திருக்கிறார்கள் அவர்கள். அப்படியென்ன சொல்லியிருக்கிறார் அந்த பேட்டியில்?

‘பேஸ்புக் ட்விட்டர்ல நான் இல்லை’ என்று கூறியவர் அதோடு விட்டிருந்தால் கூட சரி. ‘எனக்கு தியேட்டர்ல வந்து கமென்ட் பண்ற பப்ளிக் பல்ஸ் போதும்’ என்று கூறியிருக்கிறார். இவரது ட்ரெய்லரையும் பட கேலரிகளையும் வெளியுலகுக்கு தெரிவிக்க பேஸ்புக் மற்றும் இணையதளங்கள் வேண்டுமாம்… இவரது படத்தை அவர்கள் விமர்சித்தால் மட்டும் பொறுக்காதாம். என்ன ஒரு பாலிஸி? சரி போகட்டும்… நாம் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. வேறு… அது பிரம்மன் ஷுட்டிங்கில் இவருக்கும் சந்தானத்திற்கும் நடக்கும் ஈகோ யுத்தம் பற்றி.

ஒரு வாய் போதாது. இன்னும் ஏழெட்டு இருந்தால் எவ்வளவு சவுரியமாக இருக்கும் என்று சந்தானம் ஏங்குகிற அளவுக்கு அவரது வாய் வன்மை எல்லா படங்களுக்கும் தேவைப்படுகிற காலம் இது. இதனால் பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்கிறார் அவர். பிரம்மன் படப்பிடிப்புக்கும் சில நாட்கள் தாமதமாக வந்தாராம். ஒருநாள் அவருக்கு ஷாக் ட்ரிட்மென்ட் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்த சசிகுமார், அதை நடத்தியும் காட்டியதாக கிசுகிசுக்கிறார்கள். எப்படி?

ஒருநாள் மாலையில் ஆரம்பித்து நள்ளிரவு 12 மணி வரைக்கும் ஷுட்டிங் தொடர்வதாக ஏற்பாடு. மாலை நேரத்திலேயே சந்தானத்தை வரவழைத்துவிட்டார்களாம். வேறு ஷுட்டிங் என்றால் ‘முதலில் அவர் போர்ஷனை எடுத்து முடிங்கப்பா’ என்று பரபரப்பார்கள். இங்கே அவரை ஏழு மணிவரை சும்மாவே உட்கார வைத்துவிட்டாராம் சசி. வேண்டுமென்றே இது நடக்கிறது என்பதை அறிந்து கொண்ட சந்தானம், கோபித்துக் கொண்டு கிளம்பி போயே விட்டார். அவரை கோபப்படுத்திய சந்தோஷத்தோடு வீட்டுக்கு போய்விட்டாராம் சசியும்.

சுருட்டு பத்த வைக்கிறேன்னு இப்படி மூக்குக்கு திரி வைச்சுகிற காமெடியெல்லாம் இவங்களால்தான் செய்ய முடியும்!

All is not well between Sasikumar and Santhanam!

Santhanam is playing an important role in actor-director-producer Sasikumar’s commercial film Brahmman. He is the busiest person in Kollywood running around different sets for shooting, besides doing his own film – Vallavanukku Pullum Ayudham. Perhaps because of his busy schedule Santhanam was unable to maintain punctuality to the shoots including that of Brahmman.

Sasikumar who plays the lead in Santhanam, was irked by the late coming of Santhanam to the shooting spot. Instead of speaking to Santhanam directly to make him understand, Sasikumar’s ego might have pushed him to behave uncharacteristically.

On a particular day, the shoot was scheduled from evening till mid-night and has requested Santhanam to be available by evening itself. However Santhanam was kept idle without any shoot. Sensing foul play Santhanam walked out of the shooting spot, while Sasikumar did not make any attempt to stop or pacify Santhanam.

Read previous post:
விடியும் வரை பேசு விமர்சனம்

யூத்துகளின் சிம் கார்டில் செமத்தியாக ஒரு கீறல் போட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் முகன். (முன்னாடியே ஒரு படம் இயக்கியிருப்பதாக ரெக்கார்டுகள் சொன்னாலும்.) காதே இல்லாமல் கூட இருந்து...

Close