‘சசிகுமார் போதும். அந்த இன்னொரு ஹீரோ வேணாம்…’ -பாலா முடிவு

பாலா படம் வெளிவருகிற வரைக்கும் மர்மம் மர்மம்… மர்மம்தான். இத்தனைக்கும் அவர் மர்ம படம் எடுப்பவரல்ல. யூகங்கள் கொடி கட்டி பறக்கும். அவர் நடிக்கிறாராம், இவர் நடிக்கிறாராம் என்றெல்லாம் பரப்பப்படும் வதந்திகளை பாலாவே ரசித்து படித்துவிட்டு சம்பந்தப்பட்ட நாளிதழ், வார இதழ்களை ஆஃப்டர் ஹேன்ட் வாஷ்ஷாக உபயோகித்துவிட்டு செல்வதுண்டு.

இப்போதும் அதுபோல வதந்திகள் பரவ ஆரம்பித்திருக்கிறது. அப்படீன்னா பாலா தன் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த படம் அண்ணன் தம்பிகளை பற்றிய கதை. அண்ணனாக சசிகுமார் நடிக்கிறார். தம்பியாக நடிக்க விக்ரம் பிரபு அழைக்கப்பட்டார். இதெல்லாம் நாடறிந்த விஷயம்தான். அதற்கப்புறம் விக்ரம் பிரபு இல்லை. அவரிடத்தில் அதர்வா வைக்கப்பட்டிருக்கிறார் என்றது வதந்தி. இப்போது அதர்வாவும் இல்லையாம். நடுவில் தேவையில்லாமல் இதில் நுழைக்கப்பட்ட விக்ரம், ‘பாலா படத்தில் நடிக்க ஆரம்பிச்சா இப்போ இருக்கிற நிலையில பென்ஷன் வாங்குற நேரத்துலதான் படம் வெளியாகும். ஏன் ரிஸ்க்?’ என்று ஒதுங்கிக் கொண்டாராம்.

சரி… கடைசியாக சுட சுட கசியும் தகவல் என்ன? இந்த படத்தில் விக்ரம், விக்ரம் பிரபு, அதர்வா, லொட்டு லொஸ்க் என்று எவரும் இல்லை. ‘சசிகுமார் மட்டும் போதும். கதையில் நிறைய மாத்தியாச்சு. அந்த தம்பி கேரக்டரே படத்துல வேண்டாம்’ என்று முடிவெடுத்திருக்கிறாராம் பாலா.

இந்த விஷயத்தால் அதிக சந்தோஷத்திலிருப்பது சசிகுமார்தான். போட்டிக்கு ஆள் இல்லேன்னா சந்தோஷம்தானே எல்லாத்துலேயும்!

Bala stays with Sasikumar in his next film

Whenever Bala into his next film, speculations hit the roof, suggesting who is in and who is out of Bala’s film. This time too it is not different. Bala is making a film with Sasikumar as hero is known to all. There were reports suggesting that Vikram Prabhu to co-star Sasikumar in the film, as younger brother. Later it was speculated that Atharva replaced Vikram Prabhu. But nothing was concrete and final. It is also heard that Vikram Prabhu was happy not to don any role in Bala’s film as it may not be possible to act in any other films in between. So what is new now. Bala has decided to go only with Sasikumar in his film, as he removed the younger brother character from the script once and for all. Every one is happy for their own reasons. Why not?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகை தன்ஷிகா வீட்டை விட்டு ஓட்டம்… – லேடீஸ் ஹாஸ்டலில் தஞ்சம்

பெற்றோர்களின் மனசை பேரீச்சம் பழத்துக்கு போடுகிற நிலைமைதான் இன்று பெரும்பாலான பிள்ளைகளுக்கு இருக்கிறது. நேற்றுகூட கண்ணீரும் கம்பலையுமாக ஒரு குடும்பம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தது....

Close