சட்டென்று மாறுது டைட்டில்…. கவுதம் மேனனை சங்கடத்தில் ஆழ்த்திய போன்!

ஒரே தலைப்பை இரண்டு படங்களுக்கு வைத்து இரண்டு பேரும் அடித்துக் கொள்வதை டிக்கெட் வாங்காமலே பார்த்து இன்புறுகின்றன இந்த தலைப்பு குழப்பத்திற்கு சம்பந்தப்பட்ட அத்தனை சினிமா சங்கங்களும். மங்கல்யாண் ராக்கெட் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கிரகங்களையும் சுற்றி வந்து முடித்திருந்தாலும், இந்த பிரச்சனையை முடித்து வைக்க எவ்வித யுக்தியும் கிடைக்காது. சக்தியும் அமையாது போலிருக்கிறது. நல்லவேளையாக இந்த அவஸ்தையிலிருந்து கடைசி நேரத்தில் தப்பியிருக்கிறார் கவுதம் மேனன்.

இவர் சிம்புவை வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ரகசியமாக இவர்கள் பெயர் வைக்க நினைத்தால் அதற்குள் மீடியாவில் கசிந்து இன்று திரும்பிய இடமெல்லாம் அதே டாக். ஆனால் இதற்கப்புறம்தான் உஷாராக்கியது இன்னொரு தரப்பிலிருந்து வந்த புலம்பல். அவர்கள் கவுதம் மேனனை தொடர்பு கொண்டு சார்… அந்த தலைப்பு எங்ககிட்ட இருக்கு. தலைப்பு மட்டுமல்ல, படத்தையே முடிச்சு சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கிட்டோம். தயவுசெஞ்சு யாருக்கும் பிரச்சனை வேணாம். தலைப்பை மாத்திருங்க என்றார்களாம்.

அப்புறம் என்ன செய்வார் பாவம்…? சட்டென்று மாறுது டைட்டில். அது என்ன டைட்டில் என்று அவர்களே சொல்லும்வரை கொஞ்சம் பொறுமையாதான் இருங்களேன், பிரஸ்….

Gautham Menon titles Simbu’s film, but…..

Gautham Menon had selected a poetic line from his earlier film Vanaram Ayiram written by Thamarai. ‘Sattendru Maaruthu Vaanilai’ was the title selected by Gautham considering the nature of the key characters in the film. Though he does not want to reveal the title, it got spread wildfire in Kollywood. On hearing, another party contacted Gautham over phone and requested him that they had the title already registered the title and in fact have obtained censor certification too for the film. Now Gautham has to tackle the issue whether to persist with the title or to change it!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சால்ட்டாவது…. பெப்பராவது… ‘டை’ அடிக்கிறார் அஜீத்

மங்காத்தாவில் ஆரம்பித்த ஸ்டைல் இது. ‘தலைவா... இதையே மெயின்ட்டெயின் பண்ணு....’ என்று ரசிகர்கள் கொண்டாட, தனது தலைக்கு டை அடிக்காமலே விட்டுவிட்டார் அஜீத். இதற்கு சால்ட் அன்ட்...

Close