சினேகாவின் சிரிப்புக்கே சரியா போச்சு… மிச்சத்துக்கு?
கோன் ‘சினேகா ’ குரோர்பதியாகிக் கிடக்கிறது சின்னத்திரை வட்டாரம். பின்னே, யார் யாரோ அழைத்தும் சின்னத்திரை பக்கமே வராத சினேகா, வர்றேன்னு சொன்னா எப்படியிருக்குமாம்? லாட்டரி சீட்டு வாங்காமலே லட்டு லட்டா பணம் விழுந்த சந்தோஷத்தில் இருக்கிறது அந்த சேனல்.
ஒரு நடிகைக்கு கல்யாண சீர் கொடுக்கும் போதே கால்ஷீட் புத்தகத்தையும் எடைக்கு போடுகிற வழக்கம் இங்கேதான் இருக்கிறது. அதற்கப்புறம் அவரை அக்கா கேரக்டரிலோ அண்ணி கேரக்டரிலோ பார்த்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவார்கள் சம்பந்தப்பட்ட நடிகையின் ரசிகர்கள். சினேகா விஷயத்தில் எல்லாமே பொய்யாக்கப்படும் என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள். அவரும் விடாப்பிடியாக, ஹீரோயின் வேஷம்னா கூப்பிடுங்க. இல்லேன்னா போயிட்டு வாங்க என்று வந்த வாய்ப்பையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டேயிருந்தார்.
இந்த நிலையில், தேவயானி மாதிரி நீங்களும் சின்னத்திரை தொடர்களுக்கு வந்துருங்களேன் என்றார்களாம் சிலர். அதற்கும் நோ சொல்லிவிட்டு காத்திருந்த சினேகாவுக்கு அடித்தது யோகம். விரைவில் வெளிவரப்போகும் ஒரு புதிய சேனலில் அப்ரோச் இது. சீரியல் வாய்ப்புதான். ஆனால் நாயகியாக அல்ல. ஒரு சிறப்பான நிகழ்ச்சியை தொகுக்கப் போகிறார்… அவ்வளவுதான். நாளொன்றுக்கு நாலரை லட்சம் சம்பளமாம்.
சினேகாவின் சிரிப்புக்கே சரியா போச்சு… மிச்சத்துக்கு?
Read article in English-
supar