சிம்புவின் ‘ராமாவரம்… ’ ஹ்ம்ம்ம், எம்.ஜி.ஆர் ஆகும் ஆசை யாரை விட்டது?

சிம்பு நயன்தாரா நடிக்கும் படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என்று தலைப்பை முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் அந்த தலைப்பு நடந்து வந்த பாதை ரொம்பவே வேடிக்கையானதாக இருக்கிறது. எப்படி?

ஒரு படத்திற்கு தலைப்பு வைத்து முடிப்பதற்குள், ஏராளமான சட்ட வல்லுனர்களையும், கிரிமினல் கிங்காங்குகளையும் மனதில் வைத்துக் கொண்டுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்த தலைப்புக்கு அவங்ககிட்டயிருந்து எதிர்ப்பு வருமோ? இவங்க டென்ஷன் பண்ணுவாங்களோ? என்று தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது நாட்டு நடப்பு. பாண்டிராஜ், சிம்பு இருவருக்கும் நடுவே இப்படி ஒரு பதற்றம் இல்லையென்றாலும் ஏராளமான டைட்டில்களை அலசி பிழிந்து காயப் போட்டுக் கொண்டிருந்தார்களாம். படத்தின் முழு கதையும் ராமாவரத்தில் நடப்பது போல அமைந்திருக்கிறதாம்.

அதனால் ராமாவரம்னு தலைப்பு வச்சா என்ன என்று சிம்பு கேட்க, ஆஹா பேஷ் என்றாராம் பாண்டிராஜ். இருந்தாலும், தனது நெருங்கிய சகாக்களான சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோரிடம் கருத்து கேட்டு போன் அடிக்க, எதிர்முனையில் வந்த பதிலில்தான் ஏராளமான பதற்றம். ராமாவரம்னாலே அது எம்ஜிஆர்னுதான் புரிஞ்சு வச்சுருக்காங்க ஜனங்க. இந்த எண்ணத்தை மாற்ற இன்னும் ஒரு தலைமுறை புதுசா பிறந்து வந்தாலும் முடியாது. அப்படியிருக்கும்போது நீங்க சிம்புவின் ராமாவரம்னு போஸ்டர் அடிச்சிங்கன்னா அது நல்லாவா இருக்கும் என்றார்களாம்.

இந்த தொலைநோக்கு சிந்தனை நமக்கு இல்லாம போச்சேன்னு பாண்டிராஜ் அமைதியாகிவிட, அட… நல்ல தலைப்பு நமக்கு கிடைக்காமலே போச்சே என்று சிம்பு கவலைப்பட்டாராம். இத்தனை வருஷங்களாக எம்ஜிஆரின் தொப்பியையும் கலரையும்தான் திருடிகிட்டிருந்தாங்க. இப்போ ஏரியாவையே கபளிகரம் பண்ணுற ஆசை வந்துருச்சா? நடத்துங்க…

Director Pandiaraj and Simbu contemplating on change of title!

Director Pandiaraj is currently busy with his film titled ‘Idhu Namma Aalu’ with Simbu and Nayanthara in the lead. Though the title has been suggested by Simbu and accepted by the director, both are no thinking of changing the title. According to sources, the entire film happens in ‘Ramavaram’, and hence they wanted to title it as ‘Simbuvin Ramavaram’. Pandiaraj, not wishing to take any risks of protests and controversies, consulted his friends, Samuthirakani and Sasikumar, who opined that by uttering the word Ramavaram it directly reminds anyone and everyone about MGR, despite the generation changes. So in all probability Pandiaraj may run into trouble by titling as ‘Simbuvin Ramavaram’. On hearing their advice, the director instantly dropped the idea of the said title.

It has become common feature in the society that in order to be in the limelight there is always a group who will create nuisance at the drop of a hat. It is therefore better not to give room for such elements to get instant name and fame.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கெஸ்ட்ரோல் கொள்கை? பார்த்திபனுக்காக மாறிய விஜய் சேதுபதி

இனிமேலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்பதை ‘ரம்மி’யிலேயே உணர்ந்திருப்பார் விஜய் சேதுபதி. அவரை வைத்துக் கொண்டே ரம்மி தோல்விப்படம் என்று விழா மேடைகளில்...

Close