சூர்யாவுக்கு இனி ரகுவரன்கள் தேவையில்லை…. -ஆர்.எஸ்.அந்தணன்

சூதாட்டத்தையும் மிஞ்சியது தமிழ்சினிமா. ரேஸ்சை விடவும் வேகத்தை மிஞ்சியது அதன் வியாபாரம். மாநகர டிராபிக்கில் மாட்டு வண்டி ஓட்டுகிற நளினத்தையும், ஆளில்லா ரன்வேயில் விமானம் ஓட்டுகிற துணிச்சலையும் ஒருங்கே பெற்றாலொழிய ஒரு ஹீரோவால் தன் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாது இங்கே.

ரஜினி- கமல் என்கிற இரு துருவங்களை தாண்டி தன்னை நோக்கி ரசிகர்களை இழுக்கிற காந்த சக்தி எவர் ஒருவருக்கு இருக்கிறதோ, அவர்தான் ஸ்டார். மற்றவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே. எல்லா ஸ்டார்களுக்கும் சூப்பர் ஸ்டராக வேண்டும் என்கிற வேட்கை இருக்கிறது. வெற்றிகள் மட்டுமே அதை தீர்மானித்துவிடுவதில்லை. அதையும் தாண்டி ஏதோவொன்று இருக்கிறது. அது என்ன என்கிற தேடல் இப்போதிருக்கிற மற்ற மற்ற முன்னணி ஹீரோக்களும் இருக்கிறது. நான் அவதானித்த வரையில் சூர்யாவுக்கு சற்று ஜாஸ்தியாகவே இருக்கிறது.

ஒரு சிலை தன்னையே செதுக்கிக் கொள்வது போலதான் அமைந்திருக்கிறது சூர்யாவின் வளர்ச்சி. எப்படி? அவர் களிமண்ணாக இருந்த காலத்திலிருந்தே அலசினால்தான் அது பற்றி பேச சவுகர்யமாக இருக்கும்.

1997 ல் வெளிவந்தது நேருக்கு நேர். அப்போதும் நான் அந்த பிரஸ்மீட்டில் இருந்தேன். அதற்கு முன்பாக சூர்யா நடித்த கேரக்டரில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜீத். இவரும் விஜய்யும்தான் இந்த படத்தின் இரு ஹீரோக்கள். அதற்கப்புறம் சிற்சில அசவுகர்யங்களின் காரணமாக உள்ளே வந்தார் சூர்யா. முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு எட்டிப்பார்க்குமே, அப்படியொரு வெட்கப்புன்னகையோடு அவர் அங்கே அமர்ந்திருந்தது இப்போதும் கண்களில் நிழலாடுகிறது. ‘சூர்யா… உங்களுக்கு தெரியுமா, நீங்க இப்போ இருக்கிற இடத்தில் வேறொரு ஹீரோ இருந்தார் என்பது? அவரை நீக்கிவிட்டுதான் நீங்கள் உள்ளே வந்திருக்கீங்க, இது பற்றி என்ன நினைக்கிறீங்க?’ மூத்த நிருபர் ஒருவர் கேள்வியை வீச…

மூன்றே மாத குழந்தைக்கு வாலிபனின் முரட்டு ஜீன்சை மாட்டி விட்டதைப் போல தவித்துப்போனார் சூர்யா. பிரஸ்மீட் ஏற்பாட்டாளரை அவர் பரிதாபமாக பார்க்க, இப்பவே கான்ட்ரவர்ஸியா கேட்டா அவர் மிரள மாட்டாரா? விடுங்க… என்று வேறொரு கேள்விக்கு தாவ வைத்தார்கள்.

இப்போது காலம் அவருக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. காலத்திற்கே கற்றுக் கொடுக்கிற அளவுக்கு அனுபவங்களை சேகரித்திருக்கிறார் அவரும். சூர்யா என்கிற நடிகனின் நெற்றிப் பொட்டில் ஆலம்பழம் விழுந்ததும், அதற்கப்புறம் அவர் தேடிவந்த இடத்தை அவரே கண்டு பிடித்ததும் நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தற்கு ஒப்பானது. ஒரு சினிமாவை விட சுவாரஸ்யமானது அது.

‘உயிரிலே கலந்தது’ என்கிற படத்தில் இவர்தான் ஹீ
ரோ. தயாரிப்பு நிர்வாகியான முத்.அம்.சிவகுமார் தயாரிப்பில் உருவான படம் அது. இரண்டாயிரமாவது வருடம். அதாவது சூர்யா அறிமுகமாகி மூன்று வருடங்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட படம். படப்பிடிப்பின் இடையில் அவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க, அந்த வழியாக கடந்து போன நடிகர் ரகுவரன் ஒரு நிமிடம் நின்றார். ‘தம்பி எந்திரி…’ என்று சூர்யாவை தட்டி எழுப்பியவர், ‘எப்படிய்யா உன்னால நிம்மதியா உறங்க முடியுது?’ என்றார். ‘ஒரு ஹீரோவுக்கு ஜெயிக்கணும்ங்கிற வெறி இருந்துகிட்டே இருக்கணும்’.

‘அந்த வெறி மனசுல ஏறிடுச்சுன்னா ஜெயிக்கிற வரைக்கும் உறக்கம் வராது தம்பி. நீ எங்கேயிருந்து வந்திருக்க என்பதை முதல்ல புரிஞ்சுக்கோ. அதுக்கான அந்தஸ்த்தை கொடுக்கிற வரைக்கும் நமக்கு உறக்கம் இல்லேன்னு நினைச்சுக்கோ….’ திருவண்ணாமலை சித்தர் பொட்டில் அடித்து சொன்னதைப் போல மனதில் பட்டதை கொட்டிவிட்டு கிளம்பிவிட்டார் ரகுவரன். ‘நேருக்கு நேர்’ படத்திற்கு பிறகு சுமார் நான்கு படங்களில் நடித்து முடித்துவிட்ட சூர்யாவுக்கு அந்த சம்பவம்தான் வெறியூட்டியது.

அதற்கப்புறம் ஃபிரண்ட்ஸ் படத்தில்தான் வெற்றி கிடைத்தது இவருக்கு. அதுவும் ‘ஸோலோ’ வெற்றியல்ல, பக்கத்தில் விஜய் இருந்தார், வடிவேலு இருந்தார், பாலாவின் ‘நந்தா’ வேறொரு சூர்யாவை உலகத்திற்கு காட்டியது. அந்தப்படம் வெற்றிப்படம்தான். ஆனால் அவர் ஸ்டாராக மாறவில்லை. மொத்த பெயரும் பாலாவுக்கு போனது. இந்த ஏற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதற்கப்புறம் வந்த, உன்னை நினைத்து, ஸ்ரீ, மவுனம் பேசியதே என்று சறுக்கல்களையும் சந்தித்தார் சூர்யா. ஆனால் ரகுவரன் ஏற்றிவிட்டு போன பொறி மட்டும் அடிக்கடி ‘பளிச்’சடித்துக் கொண்டேயிருந்தது அவரிடம். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரை மெருகேற்றியவர்களில் முக்கியமானவர் கவுதம் மேனன். பின்னாளில் ஹரி சூர்யாவை போலீஸ் அதிகாரியாக காட்டுவதற்கு பெரிதும் துணை நின்றது கவுதம் மேனனின் ‘காக்க காக்க’தான். சூர்யாவை ஸ்டராக்கியது கவுதம் மேனன் என்றால், ஒரு ஸ்டார் எப்படியிருக்க வேண்டும் என்று செ.மீ செ.மீட்டராக செதுக்கியது பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த்.

அயன், மாற்றான் படங்களை இயக்குவதற்கு முன்பே, அவர் சூர்யாவுக்கு ஒரு ‘கைடு’ ஆனார். ஒரு ஹீரோ எப்படியிருக்கணும், எப்படி உட்காரணும், அவன் பார்வை எப்படியிருக்கணும், மற்றவர்களிடம் கை குலுக்குகிற போது அந்த கைக்குள் எவ்வளவு மின்சார சக்தி இருக்கணும் என்பது வரை அவர் சொல்லித்தந்த விஷயங்கள் சூர்யாவை கம்பீரமாக்கியது.

தனது படங்களுக்காக தன்னையே ஒப்புக் கொடுத்தார் அவர். வாரணம் ஆயிரம் படத்தின் போது சூர்யாவின் அப்பா சிவகுமார் சொன்னது இப்போதும் மனதில் நிழலாடுகிறது. அதில் வரும் இரு சூர்யாக்களில் ஒரு சூர்யாவின் தோற்றத்திற்காக அவர் பட்ட பாட்டை ஒரு அப்பனின் தவிப்போடு வர்ணித்தார் அவர். ‘ரெண்டு மாசம் வெறும் இலை தழைய மட்டுமே தின்னுட்டு இருந்தான் அவன்…’ என்றார் சிவகுமார்.

ஏழாம் அறிவு படத்தில் அந்த போதி தர்மர் கேரக்டரின் கண்களில் ஒரு சாந்தம் தெரிய வேண்டும் என்றாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அதந்காகவே சுமார் ஒரு மாதம் மெடிட்டேஷன் பயிற்சி செய்து அந்த கண்களில் சாந்தத்தை வரவழைத்தார் சூர்யா.

காக்க காக்கவுக்கு பிறகு தனது படத்தை தானே டிசைன் செய்து கொள்கிற அளவுக்கு துணிச்சல் வந்தது சூர்யாவுக்கு. அதுமட்டுமல்ல, தன்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களை தனது உறவாக கருதியதும் அப்போதிலிருந்துதான். ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படமே இதற்கு தகுந்த உதாரணம். ‘காக்க காக்க’ படத்தில் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணா இயக்கிய படம் அது.

இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சூர்யா. ஆனால் ஒரு திடுக் சம்பவம். ‘காக்க காக்க’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது அதில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆர்.டி.ராஜசேகருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முதுகு தண்டில் பிரச்சனை. அவ்வளவு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொண்ட சூர்யா, எத்தனை மாதங்கள் ஆனாலும் அவர் வந்தால்தான் ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ ஷுட்டிங் என்று கூறிவிட்டார். சுமார் இரண்டு மாதங்கள் இதற்காக யூனிட்டே காத்திருந்தது.

இதென்ன… பிரமாதம், கஜினி எப்படி வந்தது தெரியுமா சூர்யாவுக்கு? நேருக்கு நேர் படத்தில் எப்படி அஜீத்தின் கேரக்டரில் நடிப்பதற்காக அவர் உள்ளே வந்தாரோ, அப்படிதான் இந்த படத்திலும் உள்ளே வந்தார் சூர்யா. மிரட்டல் என்கிற பெயரில் அஜீத்திடம் சொன்ன அதே கதையை விக்ரமிடம் சொல்லி, விக்ரமுக்கு சொன்ன அதே கதையை சூர்யாவிடம் கொண்டு வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த முறையும் இந்த படத்தை சூர்யாவேதான் வடிவமைத்தார். ஒளிப்பதிவாளரில் துவங்கி, மற்ற மற்ற டெக்னீஷியன்களை தானே விரும்பி கேட்டார் முருகதாசிடம். அதற்கப்புறம் ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பின்னாலும் சூர்யாவின் நடிப்பு மட்டுமல்ல, அதை தாண்டிய உழைப்பும் இருந்தது.

ஒரு நடிகன் நல்ல மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டும். அது சூர்யாவுக்கு இயல்பிலேயே அமைந்ததா, சிவகுமாரின் வார்ப்பு என்பதால் அப்படியா, தெரியவில்லை. ஒரு சம்பவத்தை கூற வேண்டும். இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சமடையும் குடும்பங்களுக்கு கல்லுரிகளில் ‘கோட்டா’ இல்லாத நேரம் அது. ப்ளஸ் டூ வில் ஏராளமான மார்க்குகள் பெற்ற தன் மகனை அவ்வளவு பணம் கொடுத்து இன்ஜினியரிங் சேர்க்க முடியாத அந்த புலம் பெயர்ந்த பெற்றோர் சூர்யாவை சந்தித்தார்கள். மதிப்பெண்களை சரி பார்த்த சூர்யா, உடனே எஸ்.ஆர்.எம் கல்லுரியில் அந்த மாணவனை சேர்த்து இலவசமாகவே படிக்க வைத்தார்.

பசங்க படத்தில் நடித்த சிறுவன் ஸ்ரீராமுக்கு குடல் பகுதியில் ஏதோ பிரச்சனை. கேள்விப்பட்ட உடனேயே அவனை தன் செலவில் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியவர் இவர். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சூர்யா, தான் வென்றதில் கிடைத்த ஐம்பது லட்சத்தை அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்ன சின்ன கனவுகளை சுமந்தவர்களுக்கு பிரித்துக் கொடுத்ததையும் இங்கே கூற வேண்டும். சினிமாவுக்குள் ஒரு நடிகன் நல்ல மனிதனாக நடிப்பதும், சினிமாவை தாண்டி ஒரு நடிகன் நல்ல மனிதனாக இருப்பதும் சூர்யாவின் ரெட்டை தகுதிகள்.

‘என்னை முதன் முதலா இயக்குநர்னு நம்புனது சூர்யாதான். நான் இதை கிட்டத்தட்ட 12 வருஷம் கழிச்சி சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கு’ என்று சமீபத்தில் டைரக்டர் அமீர் ஒரு மேடையில் பேசினார். இன்னும் 120 வருடங்கள் ஆனாலும் இந்த உண்மை மாறப்போவதில்லை. பாரதிராஜா சொன்ன மாதிரி, ‘வயல்ல விதைச்சுகிட்டேயிருப்போம். திடீர்னு ரெண்டு விதை தப்பிப் போய் வரப்பில் விழுந்து அசுர வேகத்தில் முளைச்சு நிக்கும்’. அது மாதிரி தப்பிப் போகிற விதையையும் கூட கண்டு பிடிக்கிற அறிவு சூர்யாவுக்கு இருக்கிறது.

சில இயக்குனர்களை அவர் ‘வேண்டாம்’ என்று மறுப்பதற்கும், சில இயக்குனர்களை ‘வேண்டும்’ என்று அணைப்பதற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதுபோன்ற காரணங்கள்தான் சூர்யாவை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

இனி சூர்யாவுக்கு ரகுவரன்கள் தேவைப்பட மாட்டார்கள்!

-‘இந்தியா டுடே’ சூர்யா ஸ்பெஷலில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரை

From shy and budding hero to a self-made hero, Suriya completes full circle!

It is a known fact that to sustain in film world, leave alone Kollywood, one must have the fire in his belly and receptive qualities to be abreast of the happenings in the surroundings. Else, the oblivion will be the result. Considering these facts, it was a very long and adventurous journey in the Kollywood for the young, shy and budding hero, Suriya, then. With his sheer hard work, determination and wisdom, he attained the ‘star’ status now, successfully. It is only important now that he sustains the tempo and maintains his hard earned stardom as long as he can.

Suriya debuted with Nerukku Ner in Kollywood. Originally Ajith was to have played the role, but due to several reasons, Suriya replaced Ajith. During the press meet of the film, Suriya looked shy and out of place. He had a puzzled look when a controversial question was thrown at him, but was rescued by the film makers, then. From then on his growth was not swift but was very mellow and slow.

After having undergone subdued period of 3 films in 3 years time, he was shooting his 4th one, Uyirile Kalanthathu produced by executive Producer MM Sivakumar, in 2000. On the sets, he was sleeping during the break. Late actor Raghuvaran who crossed Suriya, saw him sleeping, and woke him up.  He asked Suriya, “How are you sleeping peacefully? Don’t you have the urge to win and attain stardom? You must always have the urge in you to become a star. Till you win the contest be reckoned, forget your sleep. Think where you have come from and till you achieve and maintain the status, you don’t have sleep”, advised Raghuvaran. His words must have pierced Suriya’s heart directly, he learnt to have the fire in his belly to win and conquer the filmdom.

He started getting into his groove slowly but surely. The success of ‘Friends’ and ‘Nanda’, happened, but it was shadowed by his co-star Vijay in the former and director Bala in the latter. Undeterred, Suriya never let his urge gone down one moment in his mission. Though his subsequent films Sri, Mounam Pesiyadhe and Unnai Ninathu did help him to be in the reckoning of Kollywood heroes, the success to get stardom was eluding.

It was Gautham Menon who turned ‘hero’ Suriya as ‘Star’ Suriya, through his Kakka Kakka. His next film Varanam Aayiram, with the same director established a place in the stardom in Kollywood. Gautham was eloquent during the promos of the film and in his interviews how hard working was Suriya in those films to live up to the expectations of the director. He won accolades from everyone including his father Sivakumar who commented that to be seen in the father’s role in that film, Suriya was virtually dieting and thriving only on greens and vegetables.

In between director AR Murugadoss who was searching for a hero through Ajith and Vikram, finally landed at Suriya’s place. The film was a revelation for both, as they hit the roof of success with this one film.

Nothing succeeds like success. Bitten by the success bug, Suriya was the hot cake for those directors who also have the urge to showcase their talents and skills. Director Hari discovered a new Suriya for Kollywood audience. Director KV Anand brought out the anger filled, but a romantic Suriya in his films Ayan and Maatraan.

With success as his best buddy, Suriya was meticulous in keeping his buddy happy always and be with him. He not only started choosing the script but also employed those technical hands whom he believes are the assets to his success.

However it must be said to the credit of Suriya that he never allowed the success to go to his head and indulge in unethical practices. With all humility, he has also grown passion to help the needy and weaker sections of the society. Though these qualities have to come within, it is also to be noted that these grow with the time and his brought up by his parents is one of the main reasons for enduring these qualities. Suriya’s help to various students, associations and needy are numerous, which cannot be said in a page or two.

When Suriya rejects a director or when he nods to a director, there may be reasons which could be justified by him alone. For others it may look wrong, but he looks at them with his own perception, because of which he is still ‘flying high’ with ‘Stardom’ status, he has earned.

(Courtesy, article by R.S. Anthanan from India Today)

-Nasu

 

Read previous post:
கோச்சடையான் ரிலீஸ்… உஷாரானார் ரஜினி

கோச்சடையான் ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது. ஆங்காங்கே வியாபாரத்தையும் ஸ்டார்ட் பண்ணிவிட்டார்கள். ஆனால் இந்த முறை ஆடு கழுத்தை கொடுக்க தயாராக இல்லை என்பதுதான் விநியோகஸ்தர்களின்...

Close