சூர்யா எங்கிட்ட மாட்டிக்கிட்டாரு… வெடி வெடிக்கும் வெங்கட்பிரபு !

‘பிரியாணி’க்கும் சக்சஸ் மீட் நடந்தது. ‘என்றென்றும் புன்னகை’ சக்சஸ் மீட் முடிந்த அடுத்த அரை மணி நேரத்தில் வெங்கட்பிரபு அழைத்தார். அவர் நினைத்தது போல எல்லாம் அமைந்திருந்தால், இன்று ஏராளமான கேள்விகளை அவர் சந்தித்திருப்பார். ஆனால்…?

அவரது பெரியப்பா இசைஞானி இளையராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இங்கே படத்தின் வெற்றி தோல்வி பற்றி அலசிக் கொண்டிருக்க முடியுமா என்ன? லேசான பதற்றத்துடன் மைக்கை பிடித்த வெங்கட்பிரபு, நான் இப்போ இன்னொரு இடத்துக்கு அவசரமா கிளம்பணும். உங்ககிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன். பட்… முடியல என்றார். பெரியப்பா உடல்நிலை எப்படியிருக்கு? என்ற கேள்விக்கு மட்டும், ‘நல்லாயிருக்காங்க. மைல்ட் அட்டாக்குன்னுதான் டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. எங்க உறவினர்கள் எல்லாரும் அங்கதான் இருக்காங்க. நானும் கிளம்புறேன் என்றவர், வந்த கடமைக்கு சில வார்த்தைகள் பிரியாணி பற்றியும் விமர்சகர்களின் அட்டாக் பற்றியும் பேசிவிட்டு போனார்.

இந்த படத்துக்கு நல்ல ஓப்பனிங் இருந்திச்சு. கலெக்ஷனும் நல்லாயிருக்கு. சிலபேர் படத்தை பாராட்டி எழுதியிருந்தாங்க. சிலர் கடுமையா கலாய்ச்சிருந்தாங்க. எல்லாருக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன். என்னுடைய கதையை முதன் முதலா தயாரிச்சதும் இல்லாம, என்னையே டைரக்டராக்கிய எஸ்.பி.பி.சரணுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிச்சுக்கிறேன். ஏன்னா, நான் உன்னை சரணடைந்தேன் படத்தை சமுத்திரக்கனி இயக்கட்டும்னுதான் சொன்னேன். ஆனால் அவர்தான் நீயே டைரக்ட் பண்ணுன்னு சொன்னார். அந்த நம்பிக்கைக்கு என்னோட நன்றி. நான் யாருகிட்டயும் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்ததில்லை. சினிமாவை பார்த்து பார்த்துதான் டைரக்டர் ஆனேன் என்றார் வெங்கட்பிரபு.

சூர்யா படத்தை பற்றியும் சில வார்த்தைகள் பேசியவர், சூர்யா எங்கிட்ட மாட்டிக்கிட்டாரு என்று சொல்ல, இதை கிண்டலாக எடுத்துக் கொள்வதா, சீரியசாக எடுத்துக் கொள்வதா என்று குழம்பியது பிரஸ். எனிவே, சூர்யா படம் துவங்கப்படும் நாளில் வெங்கட்பிரபு இன்னும் மனம் திறந்து பேசுவார்….

Venkat Prabhu attends Briyani success meet with anguish

The success meet of Briyani was held today. Venkat Prabhu the director of the film sought the excuse of the press as his uncle Ilayaraja was admitted to hospital. He said that though he wanted to share his thoughts with the press on the film, he could not do so as he had to to leave for the hospital. He has confirmed that his uncle had a mild attack and his condition has been stabilised.

Speaking on the film, he said that the film had received mixed reviews from critics and thanked everyone for their views. He also thanked his friend SPB Charan who had not only produced his story but also reposed faith in him to direct the film, though I had requested him to make Samudhrakani to direct the film. He was insistent that I should direct the film and that is how I had become the director now.

He just touched briefly about the film he is planning to do with Suriya in the lead but did not give any details. Those things will wait for the inaugural event of the film, perhaps.

1 Comment
  1. krishna says

    Utter lie. There is no crowd for movie in Coimbatore. In Tirupur, at Shanti theatre evening show, only one car and 3 bikes were seen at 6 P.M. show.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்த படம் ஓடலேன்னா ரெஸ்ட்ராரென்ட் வைச்சு பொழச்சுக்கலாம்னு இருந்தேன்! ஜீவா விரக்தி

‘என்றென்றும் புன்னகை’ படத்தின் சக்சஸ் மீட் இன்று! சிவப்புப் புறாவாக த்ரிஷா வந்திறங்க, ‘இத பார்றா எவ்ளோ அழகான த்ரிஷா?’ என்று புகைப்படக்காரர்கள் அள்ளி நிரப்பிக் கொண்டார்கள்...

Close