சூர்யா போனாலென்ன? காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன் இருக்காங்களே… – மேனேஜர் கூல்!

சூர்யா தன் மேனேஜரை நீக்கிய தகவல் காட்டு தீயாக பற்றிக் கொண்டு எரிய, மேனேஜர் மட்டும் செம கூலாகவே இருக்கிறாராம். ஏன்? காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற முக்கிய நடிகைகளுக்கும் இவர்தான் மேனேஜர். சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சமந்தாதான் ஹீரோயின். அடிச்சு பிடிச்சு தடுக்கி விழுந்தாலும், நம்ம மடியில்தானே விழணும் என்கிற தெம்பில்தான் செம கூலாக இருக்கிறாராம் அவர்.

பொதுவாகவே இவரை மேனேஜராக வைத்துக் கொள்வதில் பல சமாளிப்ஸ், மற்றும் சந்தோஷங்கள் நிலவி வருகிறது ஹீரோக்களிடம். (அப்படியே ஒரு இடைச்செருகல், தனுஷுக்கும் இவர்தான் மேனேஜர்) தென்னிந்தியாவில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் பிரபலமாக விளங்குகிற ஒரு சினிமா இதழின் சென்னை பொறுப்பாளரும் இவரே. இவரை பகைத்துக் கொண்டால் வருடா வருடம் கிடைக்கிற விருது அம்போதான்.

நாடே கதிகலங்கிப் போகிற அளவுக்கு இந்த பத்திரிகை நடத்தும் விழாக்களிலும் இவர்தான் விருதுகளை பொறுக்கி தர வேண்டும். அப்படின்னா இனிமே சூர்யாவுக்கு விருதே கிடைக்காதா? அதெல்லாம் ஒன்றுமில்லை, இவரையே நம்பியிருக்கும் துண்டு துக்கடாக்களுக்குதான் அந்த இம்சை. சூர்யாதான் அதையெல்லாம் கடந்தவராச்சே…

முடிவா என்னதாம்ப்பா சொல்ல வர்றீங்க? மேனேஜரோட இமேஜ்ல சூர்யா கரிக்கட்டையால கிறுக்கினாலும் சுண்ணாம்பு அடிச்சு சுத்தமா வச்சுக்கதான் ஏகப்பட்ட ஹீராயின்ஸ் இருக்காங்களே, அப்புறம் என்னவாம்?

Suriya proposes, his (ex) manager disposes?

After the turn of Hansika’s mom, it is the turn of Suriya’s turn to fire his manager. Fortunately or unfortunately, what Suriya proposed, was easily disposed of by his ex-employee. The reason, he is the manager for several known and popular actresses, including Samantha, Shruti Hassan and Kajal Aggarwal, as well as our own Dhanush. Not to forget that he is also in-charge of Chennai operations of the popular film magazine from Mumbai, which conducts Annual Awards functions year after year. With all these credentials, this (ex) manager can smother the spin hurled by Suriya. Can Suriya be intimidated for getting any awards by the magazine? Well, again, Suriya can easily outwit his ex-emplyee as Suriya has crossed the age of influence and recommendations. The net result – ‘ a win-win ‘ for both!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் பாராட்டு

 

Close