ஜில்லா தியேட்டர்ல என் கட் அவுட்டும் இருக்கணும்…. – நடிகர் ஜீவா உத்தரவால் அதிர்ச்சி!

தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தலைவலி கொடுப்பதில் சிம்புவை மிஞ்சுகிறவர் ஜீவா. சமீபத்தில் ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் வெற்றி பிரஸ்மீட்டில் பேசிய அப்படத்தின் டைரக்டர் அகமது, இந்த படத்தை முடிக்கறதுக்குள்ள ரத்த கண்ணீர் வடிச்சுட்டேன் என்று குறிப்பிட்டாரல்லவா? அது ஜீவாவை பற்றிதான்.

இப்படி யார் யாருக்கோ டார்ச்சர் தருபவர், தன் சொந்த அப்பாவை சும்மாயிருக்க விடுவாரா? இவருக்கும் இவரது உடன்பிறப்பு ஜித்தன் ரமேஷுக்கும் அவ்வப்போது முட்டிக் கொள்கிறதாம் வீட்டில். இந்த உள் நாட்டு கலகத்தை கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் கையை பிசைகிறாராம் சௌத்ரி சார். ஜீவாவுக்கு ஓரளவுக்கு மார்க்கெட் இருக்கிறது. ஆனால் ஜித்தனுக்கு இல்லவே இல்லை. இந்த நிலையில் யார் ஒசத்தி என்கிற ஈகோ ஆட்டோமேடிக்காக கிளம்பி, ஆட்டோ ஆட்டென ஆட்டுவதால், வீட்டில் எந்நேரமும் கலவர மேகம் சூழ்ந்தபடியே இருக்கிறதாம்.

இந்த கிறுகிறுப்பு ஆணானப்பட்ட விஜய்யையும் விடுவதாக இல்லை. அதுதான் கொடுமை. ஜில்லாவில் ஜீவா ஒரு பாடலுக்கு விஜய்யுடன் ஆடியிருக்கிறார். இப்படம் வெளிவரும்போது தியேட்டர்களில் விஜய் கட் அவுட் வைக்கப்பட வேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் ஒரு தொகையை சவுத்ரி சார்பாகவும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம். சில காம்பளக்ஸ் தியேட்டர்களில் வீரம் படமும் வெளியாவதால், அஜீத் கட் அவுட்டை விட விஜய் கட் அவுட் பெரிசா இருக்கணும் என்பதால் சவுத்ரியே இதில் நேரடியாக இறங்கி உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

ஏற்கனவே ‘உனக்கு அந்த இடம், எனக்கு இந்த இடம், ம்ஹும்…. அதெல்லாம் முடியாது. எனக்கு இந்த இடம்தான் வேணும்’ என்று அஜீத் விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டிருக்க, நடுவில் ‘நம்ம கட் அவுட்டையும் பலமா வைங்க’ என்று உத்தரவு போட்டிருக்கிறாராம் ஜீவா. ஒரு பாடலுக்கு இந்த படத்துல நானும் ஆடியிருக்கேன்ல… ? அதனால்தான்… என்று அவர் காரணம் கூறினாலும், தம்பி… வேணாம்ப்பா. சண்டை அவங்களோட போகட்டும் என்கிறாராம். சவுத்ரி.

இந்த படத்தில் ஜீவா மாதிரி நானும்தான் பங்குதாரர். என் கட் அவுட்டும் அங்க தியேட்டர்ல இருக்கணும் என்று ஜித்தன் ரமேஷும் கிளம்பினால் என்னாவது என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் வட்டாரத்தில்.

உங்க ரெண்டு பேரோட கபடி மேட்சையும் விஜய் கிரவுண்டுலதான் ஆடிப்பார்க்கணுமா பிரதர்ஸ்…?

Jiva’s demand puts RB Choudhary and theatre owners in fix?

Jiva who celebrated his birthday yesterday in orphanage and destitute homes is not generous when it comes to ego declaring his status. There are reports that Jiva is trouble-some in shooting spots for the makers. Recently the director Ahmed of Endrendum Punnagai indirectly mentioned this in his speech that he shed blood through his eyes, before completing the film, perhaps a pointer of the difficulties he might have faced from the lead actor.

Now Jiva has raised revolt of sort, asking his father RB Choudhary to put his cut-out too alongside of Vijay in theatres where Jilla  is being released. Already theatres which will show Ajith’s Veeram and Vijay’s Jilla, are in tense with fans of both the actors virtually declaring war against each other for placing cut-out and banners of their heroes. Also it is said producer RB Choudhary is very particular that cut-out of Vijay should be higher than that of Ajith in all the theatres, and he personally does it under his supervision. With Jiva’s insistence for a cut-out alongside of Vijay, producer-father is in a fix. Jiva cites that since that he appears in a cameo in a song with Vijay, a cut-out of him should be placed at the theatres. His father’s advice seems to have fallen into deaf ears, it seems.

Theatre owners wonder tomorrow if Jithan Ramesh too demands a cut-out of him being the co-producer, it may further aggravate the already tensed atmosphere.

It would be better and conducive for everyone, in future, if parties concerned work out a strategy to avoid clashes and bloodshed at the theatres, for the sake of the fans and other audience. Will they listen?

Read previous post:
அனிருத்தின் ஆர்வக் கோளாறு

அனிருத் என்ற ஹாட் கேக் மீது அருவா போடாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. முன்பெல்லாம் நாளிதழ்களில் வரும் பட விளம்பரங்களில் ‘ராகதேவன் இசையில்...’ என்று டாப் கார்னரில்...

Close