‘ஜெயிச்சாகணும்….’ அதற்காக கார்த்தி எடுத்த புதிய முடிவு

கண்ணு இன்னும் முழுசா கெடல. அதனால் சூரிய நமஸ்காரம் தப்பில்ல என்று நினைத்திருக்கலாம். சமீபத்திய தோல்விகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் கார்த்தியும், அவரை சுற்றி இருப்பவர்களும். அண்மைகாலமாக நடந்து வந்த ‘காளி’ படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டார்களாம். இது முதல் கட்ட நடவடிக்கை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அதை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்.

காளி பட ஸ்கிரிப்ட்டை சினிமாவில் அனுபவம் வாய்ந்த சிலருக்கு கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறார்களாம். அவர்கள் கூறும் கருத்துக்களை ஆவலோடு பரிசீலிக்கவும் தயாராக இருக்கிறது கார்த்தி வட்டாரம். இந்த படத்தை இயக்கவிருப்பது அட்டக்கத்தி என்ற அம்சமான படத்தை இயக்கிய ரஞ்சித். வடசென்னையில் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவத்தை முன் வைத்து ஸ்பார்க் ஒளிரும் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கியிருக்கிறாராம் அவர். அப்படியிருந்தும் முன்னெச்சரிக்கை காரணமாக திரைக்கதை வசன புத்தகம் சிலர் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

சறுக்கலை நினைத்து சங்கடப்படுவதைவிட அதிலிருந்து மீண்டெழ நினைப்பவருக்கே வெற்றி. அது கார்த்தியிடம் வந்து கைகுலுக்க வாழ்த்துவோமாக!

Karthi cautious about his forthcoming film 

Karthi did not have a good 2013 year, as his films flopped one after the other at the BO. This has made him to give deep thought to analyse the reasons for the failure, while at the same time to ensure that his upcoming films are done in such a way to receive the audience appreciation and do good business at the BO. It is said that he has now stopped shooting of his forthcoming film Kaali (still not changed?) for a while now. He has requested his well wishers in the industry and trade circles to go through the bind script of the film and suggest any thing that may not be to the liking of the audience or to include some scenes which may work in much better way. This may, he hopes, will work out little better in improving the performance of his films at the BO. We wish him good luck in his efforts.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜெய் ஆகாஷின் ஆனந்தம் ஆரம்பம் பட ஸ்டில்கள்

[nggallery id=89]

Close