டாக்டருங்களும் ரோட்டுக்கு வரப்போறாங்களா? அடக்கடவுளே….

துபாயில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றின் ஃபிரிலான்ஸ் நிருபராக பணியாற்றி வந்த கஸாலி, இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கி வரும் படம் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’. மருத்துவ உலகமே ஒரு மாஃபியா கும்பல் போல செயல்படுகிறது என்பதுதான் இவரது படத்தின் மெயின் லைன். நாமெல்லாம் பரிசோதனை எலிகள்தான் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லப் போகிறாராம்.

இதற்காக மருந்து கம்பெனிகளிலும், மருத்துவமனைகளிலும் மாறுவேடம் போட்டு பணியாற்றியும் வந்திருக்கிறாராம். படம் வெளிவரும்போது மருத்துவர்கள் எல்லாரும் கூடி போராட்டம் நடத்தினா, நான் சேர்த்து வச்ச ஆதாரங்களை புட்டு புட்டு வைப்பேன் என்கிறார் இப்பவே.

ஒரு படத்துக்காக சாலைக்கு வந்து போராடாத ஒரே கூட்டம் அதுதான். இப்ப அதுக்கும் சடாரி சாத்திட்டீங்களா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வராத ஹீரோயின்… வாடிப்போன நிருபர்கள்

Close