தனுஷ் கிண்டல்… கே.வி.ஆனந்த் எரிச்சல்! அனலில் சிக்கிய அநேகன்
ஒரு பாடல் காட்சியை எத்தனை நாட்கள் எடுப்பார்கள்? ஷங்கராக இருந்தால் ஒரு மாதம் கூட எடுப்பார்கள். தமிழ்சினிமாவில் டிஞ்சர் வாங்கியே பழக்கப்பட்ட உப்புமா டைரக்டராக இருந்தால், தயாரிப்பாளர் அவரை ஒரே நாளில் எடுக்க சொல்வார். அவரும் உம் கொட்டிவிட்டு, கொட்டிய வினாடியிலிருந்தே ஷுட்டிங்கை ஆரம்பித்துவிடுவார். ஒரு பாடலை உருவாக்க சராசாரியாக மூன்று நாட்கள் போதும் என்பது நடுநிலை பட்ஜெட்டாளர்களின் கணக்கு. செட், கேமிரா, டான்ஸ் மாஸ்டர், சொதப்பாத குரூப் நடனக்காரர்கள், இவர்கள் அத்தனை பேரையும் எரிச்சல் படுத்தாத ஹீரோ ஹீரோயின் இருந்தால் இந்த மூன்று நாட்கள் என்பது பெரிய கஷ்டமில்லை. ஆனால் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்காக எட்டு நாட்கள் எடுத்தார்களாம் ஒரு பாடலை.
அநேகன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இதில் நான்கு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ்.
இந்த படத்திற்காக எட்டு நாட்கள் பாடல் காட்சியை எடுத்ததற்கு பிறகும் உற்சாகமாக இருந்தாராம் கே.வி.ஆனந்த். ஆனால் தனுஷ் டயர்டாகிவிட்டாராம். ஏன்பா… இத்தனை நாட்கள் இந்த பாடலை எடுக்கணும். அதிகபட்சம் போனா அஞ்சு நாள்ல முடிச்சிருக்கலாமே என்று அவர் கமென்ட் அடிக்க, போட்டுக் கொடுக்கவென்றே திரியும் ஒரு சில டுபாக்கூர்கள் இதை அப்படியே போய் கே.வி.ஆனந்திடம் ஒப்பித்தார்களாம். இதில் அப்செட் ஆன ஆனந்த் தனுஷை அழைத்து சிலபல வார்த்தைகள் உதிர்க்க, யூனிட்டே அயர்ன் பாக்ஸ் ஆகிக் கிடப்பதாக கூறுகிறார்கள்.
வொஸ் திஸ் கொலவெறி என்ற உலகமே வியந்த பாடலை எவ்வளவு கேவலமாக படம் பிடித்திருந்தார் தனுஷும், அவரது டீமும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நிலைமை அப்படியிருக்க, தனுஷ் வாயை திறக்காமலே நடிப்பதுதான் அநேகனுக்கும் நல்லது, அவருக்கும் நல்லது.
Dhanush’s comment draws ire on KV Anand
Director KV Anand is currently busy with his Anegan starring Dhanush in the lead, in which Dhanush sports 4 get ups. Director shot a song sequence recently for the film with Dhanush for about 8 days. Anand was happy at the output. However Dhanush was reported to have wondered as to why the director took 8 days for the song when it could have been completed in 5 days. Dhanush’s comments reached Anand’s ears, who seemed to have upset with that. Later he called the actor and uttered a mouthful due to which the unit seems to be in shambles, it is heard.
Though we all know the talents of the National Award actor, it would be befitting if he leaves it to the director on matters of making the film. Different trades needs different skills and talents. Everybody cannot claim to be a Kamal Hassan and it is precisely for the reason why Rajini is adored as the director’s actor.
andhanarin karpanaigal thodarum