தப்பித்தார் சௌத்ரி சிக்கினார் விஜய்

‘ஜில்லா’ படம் பத்தே நாளில் ஐம்பது கோடி வசூல், எண்பது கோடி வசூல் என்று தாரை தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் நிஜக் கதை வேறு என்கிறது தியேட்டர் வட்டார தகவல்கள். ஆனால் இந்த படத்தின் வியாபாரம் நடக்கும் போதே வலையிலிருந்து தப்பிக்கிற சூட்சுமத்தையும் அறிந்து கொண்டு அதன்படி செயல்பட்டாராம் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி.

இவரது சூப்பர் குட் நிறுவனத்திற்கென நாடு முழுக்க ரெகுலர் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் திரண்டு வந்து, ‘ஜில்லாவை எங்களுக்கே கொடுக்கணும்’ என்று கேட்க, ‘அப்புறம் சொல்றேன் கிளம்புங்க’ என்று நாசுக்காக அவர்களை அனுப்பி வைத்துவிட்டாராம். கையோடு அவர் செய்த வேலைதான் இன்னும் சிறப்பு. விஜய் தரப்பிலிருந்து ஒரு லிஸ்ட் கொடுக்கப்பட்டதாம். அவர்களுக்கே படத்தை விற்றுவிட்டார் அவர். இப்போது சவுத்ரியிடம் உதட்டை பிதுக்கும் அவர்களிடம், எதுவா இருந்தாலும் அவரை கேளுங்க என்று விஜய்யை நோக்கி கை காட்டுகிறாராம். வேறு வழியில்லாமல் தனது மேனேஜர் ஒருவரை பினாமியாக போட்டு ஒரு படம் எடுக்க முடிவு செய்திருக்கிறதாம் விஜய் தரப்பு.

இந்த படத்தை சலுகை விலையில் கொடுத்து சங்கடத்தை தவிர்ப்பாராம்…

Vijay will compensate Jilla loss!

While the high pitched publicity campaigns tom-tom resounding success of Jilla with huge collections the real story is different, it is heard now. The distributors and theatre owners have approached the producer RB Choudhary of Super Good Films for covering their loss in Jilla, the intelligent producer that he is, he has escaped from the trouble, say sources.

When Jilla theatrical distribution was planned, Choudhary did not give the distribution rights of Jilla, to his regular distributors. Instead he has obligingly given the distribution as per the actor’s recommendations. Now when the distributors have approached the producer to compensate for the loss, Choudhary simply ducked the issue saying that he has not finalised the distribution rights and has been done by the actor, and asked them to approach the star.

Now it is said that Vijay will be producing a film with his manager as producer and would give the rights to these distributors to cover their loss of Jilla.

Read previous post:
வருந்தினார் வைரமுத்து நாக்கை சுருக்கினார் நமீதா

இருக்கிற எல்லா வேலைகளையும் சற்று தள்ளி வைத்துவிட்டு இதை படித்தால் உங்களுக்கு நெஞ்சுவலி பிரஷர் எல்லாம் நிமிடத்தில் காலியாகிவிடும். அப்படியொரு இம்பார்ட்டன்ட் நியூஸ்... நமீதா எல்லா மேடைகளிலும்...

Close