தப்பு விஜய் சேதுபதி மீது இல்ல….

விஜய்சேதுபதிதான் கோடம்பாக்கத்தின் இப்போதைய கண்ணபிரான், ‘கல்லா’பிரான்… எல்லாமும்! குறைந்த முதலீடு, நிறைந்த லாபம் என்று இவரை வைத்து ரேஸ் குதிரை ஓட்டிய தயாரிப்பாளர்களுக்கும் இப்போது லேசாக ஜெர்க் கொடுக்க ஆரம்பித்திருக்கிறாராம் அவர். பின்வரும் விஷயத்தை கேட்டால், தப்பு அவர் பேரில் இல்லை என்கிற முடிவுக்கு எளிதாக வந்துவிட முடியும்.

வேறொன்றுமில்லை, சூதுகவ்வும் தயாரிப்பாளர் அந்த நேரத்தில் விஜய் சேதுபதிக்கு கொடுத்த சம்பளம் வெறும் ஐந்து
லட்சம்தானாம். அந்த படத்தின் ஹிட் உலக தாறுமாறு…. அதற்கப்புறம் அவர் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க நினைத்தார். மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டார் சேதுபதி. சம்பளம் பற்றி பேசிய தயாரிப்பாளர், ‘உனக்கு ஒரு கோடி தரலாம்னு இருக்கேன்’ என்று பெருமையாக சொல்லப்போக, ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக் கொண்டே கிளம்பினாராம் விஜய்சேதுபதி. இப்போது அவருக்கு ஐந்து சி கொடுக்கவும் ஆட்கள் ரெடி. இந்த யதார்த்தத்தை அவருகிட்ட எப்படி சொல்றது? அவரே விசாரிக்கவும் மாட்டேங்கிறாரே என்று நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாராம் விஜய் சேதுபதி.

நாலு பேருகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு சம்பளம் பேசுங்க சார்…

Vijay Sethupathi laughs off to Soodhu Kavvum producer

Vijay Sethupathi is not the star in the making but has established himself as a bankable star with small time producers made bounty capitalising his name on their films. Vijay Sethupathi is genuinely making efforts to raise the bar now and wants to be seen as bankable commercial hero. When his stars are on the raise, here is a producer who offered him a salary to work in his film as if he is doing Vijay a favour.

Vijay Sethupathi’s Soothu Kavvum was a erratic hit which made its producer grow leap and bounds. Now he is planning to do another film with Vijay which is quite normal. However the salary he has offered to Vijay is amusing, considering the fact Vijay has emerged victorious in all his outings so far.

When the producer told him that he is planning to offer Rs.1 crore as salary, Vijay Sethupathi without uttering a word, laughed off, and vacated the place. What else can he do, when the going for Vijay Sethupathi in the market is Rs.5 crores minimum.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரம்மன் படத்தில் சசிகுமார் லவ்ஸ்ஸ்ஸ்ஸ்…..

[nggallery id=110]

Close