தாமரை முயற்சியால் ஒன்று சேர்ந்த சங்கங்கள்!

பல முக்கியமான விஷயங்களில் தலைவாழ இலையை குப்புற போட்ட மாதிரிதான் இந்த
சங்கங்கள் நடந்து கொள்ளும். அதுவும் சினிமா சங்கங்கள் இருக்கிறதே?
கேட்கவே வேண்டாம். எந்த பிரச்சனையை அணுகினாலும் நாளொரு நலங்கு , பொழுதொரு
பொல்லாப்பு, என்று விஷம் கக்குவார்கள்.

இப்போது கூட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நியாயமாக வெற்றி பெற்ற கேயாருக்கு
எதிராக கொம்பு சீவிக் கொண்டு நிற்கிறது தாணுவின் அணி. இப்படி எல்லா சங்கங்களிலும்
இவரை கவிழ்க்க அவர், அவரை கவிழ்க்க இவர் என்று பெரும் பிரளயமே நடந்து வருகிறது.

அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு தீர்மானம் போட வைப்பது அரிதிலும் அரிது. ராஜீவ் கொலை வழக்கில்
சிக்கியிருக்கும் ஏழு பேரின் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரும்
தீர்மானத்தை தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி அமைப்பு, இயக்குனர்கள் சங்கம். நடிகர் சங்கம்
உள்ளிட்ட அத்தனை சங்க நிர்வாகிகளையும் கூட்டி நிறைவேற்ற வைத்திருக்கிறார்
கவிஞர் தாமரை.

இன உணர்வு விஷயத்தில் தாமரை இலை தண்ணீராக நழுவும்
பாடலாசிரியர்களுக்கு மத்தியில், தாமரை எப்பவுமே ஸ்டிராங்தான்!

Lyricist Thamarai ‘s efforts bear fruits

In the prevailing scenario it will be very difficult to bring warring groups under one umbrella in an Association, leave alone unity amongst various Association. That too, bringing various Associations in Kollywood is next to impossible unless some prominent personality intervenes. But thanks to lyricist Thamarai she put her efforts to bring all the Associations including Producers’ Council, Directors’ Union, FEFSI and other bodies under one roof for a social cause. She had brought all the bodies and moved a resolution asking for the release of the convicts of late Prime Minister Rajiv Gandhi murder, which was passed unanimously.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கைநீட்டி அழைக்குது காவிக் கட்சி ? சிக்காமல் பறக்குது விஜய் பட்சி

தேர்தல் களத்தில் தண்ணீர் தெளித்து ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். ‘இதுல உங்க ரோல் என்ன?’ என்று நட்சத்திரங்களை நச்சரிக்கிற வேலையிலும் இறங்கிவிட்டது ஒவ்வொரு அரசியல்...

Close