தாவணியில் ஊக்கு…. மறைக்கப்பட்ட ஹிப்…. முன் ஜாக்கிரதை நயன்தாரா

காதலர் தினத்தன்று திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது உதயநிதியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ ஆனால் இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு ஜோடியாக வருவார்கள் என்று எதிர்பார்த்தால், நயன்தாரா வழக்கம் போல எஸ்கேப். வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதாக கிசுகிசுத்தார்கள். திரையிடப்பட்ட இரண்டு பாடல்களில் நயன்தாராவின் ஆட்டத்தையே பின்தங்க வைத்துவிடுகிற வேகத்தில் ஸ்டெப்ஸ்சில் கலக்கினார் உதயநிதி. (மானாட மயிலாடவுக்கே ஜட்ஜ் ஆக்கலாம் போலிருக்கே) முந்தைய ஓ.கே. ஓ.கே வில் ஓ.கே என்கிற அளவுக்குதான் இருந்தது உதயநிதியின் டான்ஸ். ஆனால் இந்த படத்தில் மட்டும் எப்படி இந்த முன்னேற்றம்?

டான்ஸ் மாஸ்டர் தினேஷுக்குதான் பாதி மார்க் போய் சேர வேண்டும். உதயநிதியை ரிகர்சல் என்ற பெயரில் பெண்டு எடுத்ததும் அவர்தான். ஒரு பாடல் காட்சியில் மாஸ்டரையே ஆட வச்சுடலாமே, மூவ்மென்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே என்று படத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் யோசிக்க, அதெல்லாம் வேணாம். நானே ஆடுறேன் என்று கூறிவிட்டாராம் உதயநிதி. இப்படியாக அவரது அசத்தல் வேக டான்ஸ் பற்றி அங்கிருந்தவர்கள் சிலிர்க்க, தனது கால்களையே நம்ப முடியாமல் பெருமை பொங்க அமர்ந்திருந்தார் ஹீரோ.

படத்தில் வழக்கம் போல சந்தானம்தான் உதயநிதியின் பெஸ்ட் ஃபிரண்டு. இன்னொரு காமடியனும் இருக்கிறார். அவர் சூரி. ஆனால் ட்ரெய்லரிலும், பாடல் காட்சியிலும் மறந்தும் அவரது முகம் தென்படவில்லை. என்ன கெடுபிடியோ? போகட்டும்… தன் பெஸ்ட் ஃபிரண்டை விட்டுக் கொடுக்கவில்லை உதயநிதி. போன படத்தில் சந்தானமும் நானும் அடிச்ச கூத்துகள் இந்த படத்தில் ரிப்பீட் ஆகிற கூடாதுங்கறதுல தெளிவா இருந்தோம். எல்லாமே புதுசா இருக்கணும்னு யோசிக்கு அதுக்கேற்ற மாதிரி தயாராச்சு. நானும் சந்தானமும் ஆடுற குத்துப்பாட்டு ஒண்ணு இருந்தது. வேணாம் மச்சான் வேணாம்… பாடலை நினைவுபடுத்தினா என்னாவது என்று அதை தெம்மாங்கு பாடலாக்கிட்டோம் என்றார் உதயநிதி.

முதல் படம் ஜெயிக்கறது கூட பெரிய விஷயமில்ல. இரண்டாவது படத்துல ஜெயிக்கறதுதான் பெரிய விஷயம். எனக்கு அந்த பெருமை இந்த படத்தால் நிச்சயம் கிடைக்கும் என்றார் எஸ்.ஆர்.பிரபாகரன். அதிருக்கட்டும்… பாடல் காட்சிகளில் நயன்தாரா தனது வயிற்று பிரதேசத்தை மறைக்கவேண்டி தாவணியில் ‘பின்’ போட்டு வந்த முன் ஜாக்கிரதையை எப்படி கவனிக்காமல் விட்டீங்க டைரக்டர்?

Nayanthara conspicuous by her absence in IKK press meet!

Idhu Kadhirvelan Kadhal press meet was held today. When everyone expected Nayanthara to show up in the press meet, she was conspicuous by her absence. It is overheard that she was busy shooting in abroad for another film.

Two songs of the film was showcased and in both the songs Udhaya has danced exceeded the expectations. While his dance performance in his debut film Oru Kal Oru Kannadi was ok, he has taken pains to excel with steps for steps with Nayanthara which everyone has appreciated.

Speaking on the occasion Udhaya told that his friend Santhanam plays his friend in the film too along with Soori. He said that he made sure that no scene should be reminded of their earlier film including the ‘koothu’ song, which they have made it as ‘themmangu’ song in IKK.

Director SR Prabhakaran said it is not a big thing to achieve success in the first film, but to sustain the success in forthcoming films will be much more commendable and he hoped that this film would give him the success.

The film will be released on 14th Feb. Valentine’s Day.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இனிமேதான் இருக்கு அனிருத்துக்கு… பொங்கியெழுமா பெண்கள் அமைப்பு?

யூ ட்யூப் என்ற அழகான அலமாரியில் கண்டதையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த கண்டதையும் வரிசையில் தனது ஐட்டம் ஒன்றையும் அடுக்கிவிட்டு கைதட்டல் விழும் என்று காத்திருந்த அனிருத்துக்கு...

Close