தி.மு.க விலிருந்து விலகுகிறார் குஷ்பு? டெல்லிக்கு அவசர பயணம்!

தி.மு.க வில் தனக்கு சீட் ஒதுக்கப்படாததாலும் பிரசாரம் செய்ய அனுமதிக்காததாலும் அதிருப்தியில் இருக்கிறாராம் குஷ்பு. இதையடுத்து அவர் தி.மு.க விலிருந்து விரைவில் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுவது குறைக்கப்பட்டிருந்தது. இதற்கு அவர் மு.க.ஸ்டாலின் பற்றிய கூறிய ஒரு சில கருத்துகள்தான் காரணம் என்றும் கூறப்பட்டது. அதன் விளைவாக திருச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றவரை செருப்புகளை வீசி தாக்கவும் முற்பட்டார்கள் திமுகவினர்.

நல்லவேளையாக அந்த பிரச்சனையிலிருந்து மெல்ல மெல்ல வெளியில் வந்த குஷ்பு மீண்டும் தன்னை தலைமை அழைக்கும். நாடு முழுக்க சென்று பிரச்சாரம் செய்ய கட்டளையிடும் என்று காத்திருந்தார். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில் வேறு முக்கிய முடிவெடுக்கப் போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்தாராம். இந்த நிலையில் அவர் திடீரென டெல்லி சென்றிருக்கிறார்.

அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரக்கூடும். அல்லது பா.ஜ.க வில் இணையக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Kushbu likely to quite DMK, rushed to Delhi?

Kushbu Sundar joined DMK with much fanfare just before 2009 Lok Sabha elections and was one of the prominent speakers and spokesperson till some time ago. However of late she has been neglected by the party high command without any valid reason. Recently she was critical of the style of functioning of DMK treasurer MK Stalin. She was hurled with chapels when she attended a marriage function by the cadres of the party. She kept aloof from then onwards hoping that the high command would call her and entrust her with canvassing responsibilities. However she was continued to be sidelined. Hurt by the acts, Kushbu has sounded out her well wishers and to her close circle that she is thinking of quitting the party.

Suddenly she has rushed to Delhi today. According to political pundits she may likely to join either Aam Aadmi Party or BJP, and the announcement may come soon.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குத்துங்க எசமான் நல்லா குத்துங்க…

எங்கோ மச்சமில்லாமல் இப்பயெல்லாம் நடக்காது... இப்படிதான் யோசிக்க வேண்டியிருக்கிறது சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்டத்தை நினைத்தால். அவர் சினிமாவில் வெற்றி பெற்றுவிட்டார்.... கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்... வந்த கொஞ்ச...

Close