‘தெனாலிராமன்’ தலைப்பை மாத்துங்க… – வடிவேலு உத்தரவு
அரை மைண்ட் ஆசாமிகளாக இருந்தால் சுத்தம். தெனாலிராமன் டைட்டிலுக்கு முன் வரும் கஜபுஜ புஜபல என்பதையெல்லாம் மனப்பாடம் பண்ணவே ஆறு மாசம் ஒரு வருஷம் பிடிக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இந்த டைட்டிலையே பலி கொடுக்க தயாராகிவிட்டாராம் வடிவேலு. இவரது உத்தரவின் பேரில் படத்தின் தலைப்பை மாற்றப் போகிறார்களாம். எப்படி?
அதுவும் வடிவேலுவின் சாய்ஸ்தான் என்கிறார்கள். படத்தின் கதைப்படி அந்தகாலத்தில் மதியூக அமைச்சராக இருந்த தெனாலிராமனின் ஆக்டிவ் மற்றும் அதிரடி சம்பவங்களின் தொகுப்புதான் இந்த படமாம். ஆனால் அதையே நேரடியாக சொல்வதை போல தலைப்பு இருக்க வேண்டாம் என்று நினைத்த வடிவேலு படத்திற்கு ‘துக்ளக்’ என்று பெயர் வைக்கலாமே என்றாராம்.
இப்போதைக்கு அது பரிசீலனையில் இருந்தாலும், இன்னும் கூட நல்ல தலைப்பாக தேடலாமே என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை இதுவே பெட்டர் என்று முடிவெடுத்தால், தெனாலிராமன் துக்ளக் ஆக மாறுவார்.
தலைப்பு எதுவாக இருந்தால் என்ன? இந்த படத்தின் முழு கன்ட்டென்ட் ஆக இருக்கும் வடிவேல்தானே படத்திற்கே அட்ராக்ஷன்!
Vadivelu seeks to change to title
Vadivelu’s come back film is progressing at swift pace now. Couple of days ago its director Yuvaraj commented that 2 years break of Vadivelu did not deter him to be lively at the sets of Gaja Bhuja Bhuja Bala Tenaliraman. However, we hear that Vadivelu is not quite happy with the title as it will be hard to pronounce and more hard to keep it in mind, as well. So he had sought to change the title of the film from the makers of the film. The makers have now thrown the ball back to Vadivelu, asking him to suggest the title himself, who after careful thoughts, suggested ‘Thuglak’. Though this title is under consideration, the makers and Vadivelu are in the process of selecting a much more attractive title, for the film.