தெருவுக்கு வந்த படைப்பாளி… படைப்பாளி கையில் பசை வாளி…!


யாரு வேணும்னாலும் படம் எடுக்கலாம், ஆனா யாராவது சிலரால்தான் ரிலீஸ் செய்ய முடிகிறது. யாரு வேணும்னாலும் ரிலீஸ் செய்யலாம். ஆனா யாராவது சிலரால்தான் அப்படத்தை ஓட வைக்க முடிகிறது. ‘சந்தைபடுத்துதல்’ என்கிற இந்த நாகரீகமான வார்த்தை, பல தயாரிப்பாளர்களின் சத்தை மட்டுமல்ல, சொத்தையும் உறிஞ்சுகிற அளவுக்கு இருப்பதுதான் வேதனை.

சுமை கால் பங்கு, சுமை கூலி முக்கால் பங்கு என்கிற இந்த நிலைமை மாறாத வரைக்கும் மிஷ்கின் போன்ற படைப்பாளிகள் தெருவுக்கு வந்தேயாக வேண்டும். வந்தேவிட்டார் மிஷ்கின். சில தினங்களுக்கு முன் கோவைக்கு ஒநாயும் ஆட்டுக்குட்டியும் பட பிரமோஷனுக்காக சென்றிருந்த மிஷ்கின், அங்கு எங்கும் போஸ்டர் ஒட்டப்படாததை கண்டு உள்ளம் புழுங்கினாராம். வேறு வழியில்லாமல் பசை சட்டியோடும் போஸ்டரோடும் அவரே சுவரு பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

அவ்வளவு அதிகாலையிலும் அவர் போஸ்டர் ஒட்டுவதை பார்க்க பெரும் கூட்டம் கூடிவிட்டதாம். ஏதோ, படத்திற்கு சீப் பப்ளிசிடி தேடிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர் இதை செய்யவில்லை என்பதை அந்த இடத்தில் நின்று நோக்குகிற எவராலும் உணர முடியும். அதிருக்கட்டும்… இந்த போஸ்டர் ஒட்டும் படலம் கோவையோடு நிற்குமா? அதெல்லாம் இல்லை.

தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் இப்படம் ஓடும் தியேட்டர்களுக்கு செல்லவிருக்கிறார் மிஷ்கின். எங்கெல்லாம் பப்ளிசிடி குறைவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் மிஷ்கினின் பசை வாளிக்கும் வேலை இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்தால் ஒன்று புரிகிறது. குழந்தை பெக்கறது பெரிசு இல்ல, அதற்கு குண்டி கழுவி பவுடர் அடித்து நாலு பேர் அதை துக்கி கொஞ்ச வைப்பதுதான் பெரிசிலும் பெரிசு!

Mysskin practically on ‘road’ with poster and gum

It was a heart rendering scene that a popular director that too with immense potential was made to roam around in the road with posters of Onayum Attukuttiyum, and gum, and virtually pasting the posters on those walls where vacant places are seen. To think of it for a film maker who produces, writes, acts and directs, has been pushed into doing such an act that too at the early hours of dawn, is not good for Tamil film industry. He has not done it to gain cheap publicity but to put that extra little effort in publicising his film this way. His film title perhaps suggests the pregnant situation existing in the film industry, where wolves are thriving at the cost of helpless lambs. He has done that during his visit to Coimbatore to promote his films and found there were no posters of his film. Heart broken, he took upon himself to do the act of a poster boy. Sensing it might be so in other areas too, he has now decided to visit all the important areas to promote his film. We sincerely wish that he should not be pushed to such a piquant situation henceforth. Giving birth to a child is the most difficult thing in the world, but bringing up the child too, though may not be as difficult, but very much incumbant upon the parents. Mysskin shows it in his own way. Will those whom Mysskin had belived and delegated the responsibility realise their folly, amend their mistakes and atleast work for the money they have received or to receive?

1 Comment
  1. suprajaa says

    To day night I have seen the film in Sangam,Chennai.

    Very neat and wonderful screenplay. I never seen such clean product in the Tamil cinema industry for the past two years.

    No Big hero’s.No fucking duet songs,no separate comedy track.No artificial fight scenes.

    Hats off to Mysskin.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நயன்தாராவுக்கு ஒரு நீதி, ஸ்ரேயாவுக்கு ஒரு நீதியா?

பல்லிக்கு ஒரு நீதி, பாம்புக்கு ஒரு நீதியா என்கிற புலம்பல் சப்தம் கேட்கிறது நடிகைகள் மத்தியில். இந்திய சினிமாவின் 100 வது ஆண்டுவிழாவில் மேடையில் நடனமாட முன்னணி...

Close