த்ரிஷா இப்பல்லாம் ஏன் இப்படி?
காதலே ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுதான். கண்ணை கட்டிக் கொண்டிருந்தாலும், கனவுலகத்தில் தள்ளுகிற இந்த காதல் கொஞ்ச நாட்களாக த்ரிஷாவை எங்கே தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக நீண்டு கொண்டிருக்கிறது. த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் காதல் என்றும், விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த கிசுகிசுவை உறுதிபடுத்துகிற விதத்தில் ஒரு விழாவில் பார்த்திபனே இழுபற்றி தனக்கேயுரிய சங்கேத பாஷையில் பேசி, த்ரிஷாவை டென்ஷனாக்கிய கதையெல்லாம் நடந்தது. ஆனால் இப்போது வருகிற தகவல்கள் இந்த அழகான பூச்சாடியை அந்தல சிந்தலயாக்கிவிட்டது.
தமிழ்நாட்டில் எங்கும் ராணாவுடன் ஜோடியாக வந்து பழக்கமில்லை த்ரிஷாவுக்கு. ஆனால் ஆந்திராவில் நடக்கும் பட விழாக்களிலும் சரி, பார்ட்டிகளுக்கும் சரி, இருவரும் சேர்ந்தே வருவார்களாம். அங்குள்ள மீடியாக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான் இருவரும். இருந்தாலும், இது லவ்வா இருக்குமோ என்றெல்லாம் அங்கே எழுதி காதல் சிறகுகளில் கண்கவர் வண்ணம் தீட்டி வந்தார்கள் அங்குள்ள மீடியாக்காரர்கள். தனது பேட்டிகளில் இதற்கெல்லாம் விடையளித்து வந்த த்ரிஷா, நாங்க வெறும் ப்ரண்ட்ஸ் மட்டும்தான் என்றும் கூறிவந்தார். அதே வார்த்தைகளை ஆண் குரலில் கூறிவந்தார் ராணா.
சரி… மேட்டருக்கு வாய்யா என்கிறீர்களா? அதே ஆந்திரா. அதே பார்ட்டிகள், விழாக்கள். ஆனால் த்ரிஷாவும் ராணாவும் தனித்தனியாக வருகிறார்கள். தனித்தனியாகவே போகிறார்கள். விசாரித்தால், காதல் அலமாரியை கரையான் அரித்துவிட்டதாம். உள்ளேயிருக்கிற நினைவுகள் என்கிற புத்தகங்களுக்கு எந்தளவுக்கு சேதாரம் என்றும் புரியவில்லை. பட்… குமுதா ஹேப்பி அண்ணாச்சி. த்ரிஷா முகத்தில் எவ்வித சோகமும் தெரியவில்லை.
ரெண்டு பேரும் சொல்லிவச்சு சொக்கட்டான் ஆடுறாங்களோ?
Has Trisha said ‘adieu’ to Rana?
The ‘love’ story of Trisha and Rana was the main plot in Andhra Cinema as both of them were seen together always. However Trisha and Rana have refuted the news reports saying they are best friends. But there was no stopping of the news item till a month ago. The ‘love’ story news item has been replaced by ‘separated’ news item in Andhra. It is heard that both Rana and Trisha are no more seen together and participate in all the events separately. Their meeting if and when happens, ends with a simple greeting gesture, say the rumours from Andhra. Interestingly there is no trace of any sadness or ‘loneliness’ in her face.