நடிகரின் ஸ்கூல்… டீச்சர்களுக்கு ஆறு மாசமா சம்பளம் வரலயாம்?

வருங்கால நம்பிக்கையே வா… வா… என்று அந்த பெரிய நடிகரை பெரிய கூட்டம் ஒன்று நம்பிக் கொண்டிருக்க, அவரது மனைவி நடத்தும் பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் டீச்சர்களுக்கு ஆறு மாத சம்பள பாக்கியாம்.

வெளியே சொல்ல முடியாமலும், வீட்டு வாடகையை சமாளிக்க முடியாமலும் அல்லல் படும் டீச்சர்கள், நிர்வாகத்தை அணுகி ‘ரொம்ப சிரமமா இருக்கும்மா. கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுத்தா நல்லாயிருக்கும்’ என்று கேட்டுப்பார்த்தால் வருகிற பதில் என்ன தெரியுமா? ‘உங்களுக்கெல்லாம் சர்வீஸ் மைண்ட் இல்லையா? ஏன் இப்படி சம்பளத்தை பெரிசா நினைக்கிறீங்க?’ என்பதுதான் அந்த பதில்.

ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத அந்த பள்ளிக் கூடத்தில் LKG, UKG க்கு டேர்ம் பீஸ் எவ்வளவு தெரியுமா? முப்பதைந்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரைக்கும். அப்படி பார்த்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் பணம் புரள்கிற பள்ளிக்கூடம் அது. இப்படி வாரி குவித்து வசூலிக்கும் இவர்களுக்கு இல்லாத சர்வீஸ் மைண்ட் பாவம், அந்த பள்ளிக்கூட டீச்சர்களுக்கு எப்படி வரும்? அல்லது ஏன் வர வேண்டும்?

மனைவி சொல்லே மந்திரம் என்று பல விஷயங்களில் பலவற்றை கண்டு கொள்ளாமலிருக்கும் அந்த பெரிய தல, இந்த சம்பள விஷயத்திலாவது தலையிட்டு டீச்சர்களை வாழ வைத்தால், புண்ணியாமாப் போவும்.

Actor’s school defaults salary to teacher for 6 months

One of the reputed and elite class schools in the city has not paid salaries to its teaching staff for the last six months. Much worse is the answer given to the teachers who are pleading to their salary dues. Only children of high echelon can afford the school as the fees for basic LKG and UKG itself would be around Rs.35000/= as poor and middle class children cannot even get a peep into the school premises.

As the struggling teaching staff approached the wife of the famous actor, who runs the school for getting the salary payment, the reply they got was stunning. “Don’t you have the service mind?” asks the wife who is managing the school. One wonders if the management indeed knows the real meaning and effect of ‘service mind’, as the fees in no way declares the claimed ‘intent’ by the management.

We do hope and plead along with the teaching staff of the school that the famous actor at least for this subject, should intervene and arrange to pay the teachers get their outstanding salary and also restore payment discipline to the teaching and other staff of the school in time, in future.

Read previous post:
வெத்தலைய மெல்லு… விடிய விடிய ஊது… சசியை சவுட்டி எடுக்கும் பாலா!

ம்... ஆரம்பியுங்கள் சித்திரவதையை...! இப்படி பாலா உறுமினாலும், பம்மிக் கொண்டு அதை அனுபவிக்க தயாராக இருக்கிறது ஒரு கும்பல். இவர்கள் அத்தனை பேரும் முன்னணி ஹீரோக்கள் என்பதுதான்...

Close