நடிகையை ரூமில் அடைத்து வைத்து சித்ரவதை… படக்குழுவினரின் பாறாங்கல் மனசு
நடிகைகள் ஏன் நாய் வளர்க்கிறார்கள் என்பது பலருக்கும் புரியாத ரகசியம். படப்பிடிப்புக்கு வருகிற நடிகைகள் தான் வளர்க்கும் நாய்களோடு வந்தால்தான் பாதுகாப்பு என்கிற நிலைமை கடந்த சில காலங்களாக ஏற்பட்டிருப்பது தமிழ்சினிமாவின் துரதிருஷ்டம். இன்று வெளியாகியிருக்கும் ஒரு செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை மணிஷா யாதவ்வை இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதனால் படப்பிடிப்பிலிருந்தே அவர் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய விபரங்கள் முழுமையாக தெரிந்த பின் அந்த செய்தி நமது தளத்தில் இடம் பெறும். அதற்குள் இன்னொரு அநியாயம்….
வேக வேகமாக உருவாகிவரும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. இவர் ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர். படப்பிடிப்பில் நேரம் தவறாமை, சம்பள விஷயங்களில் கெடுபிடி காட்டாமை போன்ற நல்ல நல்ல குணங்களால் படக்குழுவினரையும் குறிப்பாக படத்தின் இயக்குனர் முத்துராமலிங்கன் மனசையும் கொள்ளையடித்தவர் இந்த கீர்த்தி ஷெட்டி.
இந்த ஷெட்டியை பட்டியில் அடைத்தது போல அடைத்து வைத்து கொடுமை படுத்தினார்களாம் ஒரு படப்பிடிப்பில். அதுவும் ஒரு பிரபல இயக்குனரின் தம்பியும், நகைச்சுவை நடிகருமான ஒருவர் ஹீரோவாக நடித்து வரும் படப்பிடிப்பில்தான் இந்த அநியாயம். ‘அட மாங்கா மடையா…’ புரியும்படியா சொல்லு’ என்று நீங்கள் கேட்டாலும், நாம் சொல்வதாக இல்லை. உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் ‘என்ன கொடுமை சரவணன்’ என்று தலையிலடித்துக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.
இந்த படத்தில் நடிக்கும் இரு நாயகிகளில் கீர்த்தி ஷெட்டியும் ஒருவர். வழக்கம் போல கொடுத்த தேதிகளில் அவர்கள் சொன்ன படப்பிடிப்பு ஸ்பாட்டுக்கு போய்விட்டார் கீர்த்தி. வந்தவரை ஒரு ஓட்டல் அறையில் தங்க வைத்துவிட்டார்களாம். வந்த அசதியில் உறங்கியும் விட்டார் அவர். கண்விழித்து பார்த்தால், கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததாம். இன்டர்காமில் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் சொல்லியும் யாரும் வந்து கதவை திறப்பதாக தெரியவில்லையாம். இப்படியே இரண்டு நாட்கள் அவரை அடைத்து வைத்திருந்தார்களாம். நல்லவேளையாக சாப்பாடு மட்டும் ஜன்னல் வழியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
வேறெந்த பலாத்காரங்களும் இல்லை. ஆனால் தன்னை ஏன் இப்படி அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்கள் என்பதையே அவரால் புரிந்து கொள்ள முடியவில்லையாம். கதறி அழுதாலும் கண்டுகொள்ளாத படக்குழு, இரண்டு நாட்கள் கழித்து கதவை திறந்துவிட்டதுடன், ‘இந்த படத்தில் நீ நடிக்கலே…’ என்று கூறி அனுப்பி வைத்தார்களாம். சம்பந்தப்பட்டவர்களை பல்லுல புல்லு முளைச்ச மாதிரி பச்சை பச்சையாக திட்டுகிறாராம் நடிகையின் தாய்குலம்.
ஐயோ பாவம் இந்த நடிகைகள்…
Are films on women for society and not for film makers?
We celebrate International Women’s Day like any ritual without giving a thought how to empower women. Ironically during Women’s Day celebrations this year, two separate incidents of misbehaving and ill-treating of two female artistes have been reported. One is incident involving Manisha Yadav which is not only controversial but may tarnish the image of Kollywood if the rumours are proved to be right. As this story needs reliable and more authentic information we defer presenting the story to a later date.
In the other incident, Keerthi Shetty who is playing the lead in Snehavin Kathalargal has been ill-treated. She is currently acting in a film as one of the two heroines in the film, playing opposite to comedy actor (brother of a popular director).
She reached Chennai for the shooting schedule and went to her hotel room and took rest. It was said that she was locked full two days. The hotel reception too did ignore her request to open the door. Thankfully food was served through the window, and no untoward incidents happen to her during her lock-up. After two days the film unit opened the door and conveyed her that she is no more associated with the film.
We can understand when politicians cry from roof top for women empowerment, but the film industry which showcases women as equals in their reel life, fails to act the same way in real life. What a shame?