நடிகை சங்கவி போலீசை நாடியது ஏன்?

புதிய கட்டிடத்தில் ஜாம் ஜாமென இயங்க ஆரம்பித்திருக்கிறது சென்னை நரக காவல் துறை ஆணையர் அலுவலகம். எந்த நேரத்தில் திறக்கப்பட்டதோ, காதல் ஜோடிகளும் கவர்ச்சி நடிகைகளும் பஞ்சாயத்துக்காக இங்கே கிளம்பி வந்துவிடுகிறார்கள். இது அடிக்கடி நடக்க ஆரம்பித்திருப்பதால், கமிஷனர் அலுவலக ரிப்போர்ட்டர்கள் எந்நேரமும் பரபரப்புடனே இருக்கிறார்கள். சமீபத்தில் தன்னை ஒரு தொழிலதிபர் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறினார் சுந்தரா டிராவல்ஸ் ராதா. அந்த பிரச்சனையை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது போலீஸ். இதற்கிடையில் திடீரென நடிகை ஸ்ரீப்ரியா வந்திருந்தார். ஏதாவது புகாருங்களா? என்று நிருபர்கள் சூழ்ந்து கொள்ள, அதெல்லாம் இல்ல என்று கூறிவிட்டு சடக்கென்று கிளம்பிவிட்டார். என்னவா இருக்கும் என்று நிருபர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க, சங்கவியும் வந்து பரபரப்பு கிளப்பிவிட்டு போயிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் சென்னை நகர காவல் ஆணையரை சந்திக்க வந்திருந்த நடிகை சங்கவி, ஒருகாலத்தில் விஜய்யோடு கிசுகிசுக்கப்பட்டவர். இன்று சினிமாவையும் துறந்து டி.வி சீரியலில் நடிக்கக் கூட முடியாமல் இருக்கிறார். காரணம் அவரது கண்களில் இருக்கும் பிரச்சனை. கார் விபத்து ஒன்றில் அவரது கண்களில் கண்ணாடி குத்தி, இப்போது லென்சோடுதான் நடமாடிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் லைட் வெளிச்சத்தை பார்த்தாலே கண்கள் கூசுமாம் அவருக்கு. அதனால்தான் படங்களில் நடிப்பதும் இல்லை. சீரியல்களில் தலைகாட்டுவதும் இல்லை. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் தற்காப்பு முக்கியமாச்சே. அதனால் துப்பாக்கியும் வைத்திருக்கிறார். அந்த லைசென்சை புதுப்பிக்கதான் இந்த விசிட் என்கிறார்கள்.

அந்தளவோடு முடிந்தால் சரி…

Sanghvi meets the Chennai Police Commissioner

Chennai Police Commissioner’s office has become busy of late, as film actresses are making a bee-line there for one reason or the other. Recently actress Radha made a complaint that a businessman cheated her. Later Sri Priya visited but the cause of the visit was not revealed. Now Sanghvi has visited the Police Commissioner’s office. Sanghvi who was very popular during her hey days suddenly vanished from the scene due to an accident in which she injured an eye and hence could not see powerful light. This resulted in not seeing her either in films or in TV serials. It is learnt that she visited the Commissioner’s office to renew her gun license.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சட்டென்று மாறுது டைட்டில்…. கவுதம் மேனனை சங்கடத்தில் ஆழ்த்திய போன்!

ஒரே தலைப்பை இரண்டு படங்களுக்கு வைத்து இரண்டு பேரும் அடித்துக் கொள்வதை டிக்கெட் வாங்காமலே பார்த்து இன்புறுகின்றன இந்த தலைப்பு குழப்பத்திற்கு சம்பந்தப்பட்ட அத்தனை சினிமா சங்கங்களும்....

Close