நடிகை தன்ஷிகா வீட்டை விட்டு ஓட்டம்… – லேடீஸ் ஹாஸ்டலில் தஞ்சம்

பெற்றோர்களின் மனசை பேரீச்சம் பழத்துக்கு போடுகிற நிலைமைதான் இன்று பெரும்பாலான பிள்ளைகளுக்கு இருக்கிறது. நேற்றுகூட கண்ணீரும் கம்பலையுமாக ஒரு குடும்பம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தது. மகள் ஒருத்தி தன்னுடன் படிக்கிற மாணவனுடன்தான் போவேன் என்று அடம் பிடிக்க, அங்கே நின்றிருந்த அந்த பெற்றவர்களின் வயிற்றில் பெட்ரோல் பங்க் வெடித்துக் கொண்டிருந்தது.

நடிகையாக இருந்தாலும் அவருக்கும் மனசு இருக்கிறது. துக்க சந்தோஷங்கள் இருக்கிறது என்பதை தமிழ்சினிமா நடிகைகளில் ஆயிரத்தி சொச்சமாவது நபராக நாட்டுக்கு மறைத்து வீட்டுக்கு உணர்த்தியிருக்கிறார் தன்ஷிகா. தற்போது அவர் தனது அம்மாவை விட்டு பிரிந்துவிட்டாராம். பரம ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது இந்த விஷயம். அதே நேரத்தில் வீடு எடுத்து தங்கினால் அது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்பதால் சென்னை சூளைமேட்டில் இருக்கிற ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் வசித்து வருகிறாராம் அவர்.

தஞ்சாவூர் தமிழச்சியான தன்ஷிகாவுக்கு காதல் கீதல் என்று ஏதாவது ஊதல் சமாச்சாரம் இருக்குமா தெரியவில்லை. ஆனால் அவரிடம் யார் பேட்டி கேட்டாலும், ‘எங்க மாமாவை கேளுங்க. அவர் பர்மிஷன் கொடுத்தால்தான் பேட்டி’ என்று ஒரு வழுக்கை தலை ஆசாமியை காட்டுகிறார். அந்த மாமா, சொந்தமாமாவா அல்லது சந்தைக்கு மட்டும் தேவைப்படும் இரவல் மாமாவா தெரியவில்லை. தன்ஷி தன் வீட்டை விட்டு வெளியேறிய கதைக்கு பின்னால் அவரும் இருக்கிறாரா? அதுவும் புரியவில்லை.

வில்லங்கமா எதுவும் நடக்கறதுக்கு முன்னாடி, நடிகர் சங்கம் தன்ஷிகாவுக்கு கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது.

Dhanishka runs away from mother to stay in Hostel!

The Peranmai girl Dhanishka, it is heard, had parted way with her mother and now staying alone in a hostel near Choolai Medu, Chennai. It is not known why she had taken the decision to go away from her mother. When requested for an interview, she has directed to contact her uncle – God knows who he is – and she can give interview only on his permission. It is also unclear if the parting way with mother is influnced by this uncle. Why not Nadigar Sangam intervenes and give the young actress some counselling before it gets out of hand.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“கவுதம் மேனனும்… சூர்யாவும்… கொஞ்சம் கடந்த காலமும்…” – நன்றியே உன் விலை இவ்ளோ சீப்பா?

நன்றியே உன் விலை என்ன? யாராலும் கணிக்க முடியாத விலைதான் அது என்பதை சமீபத்தில் கவுதம் மேனனிடம் காண்பித்திருக்கிறார் சூர்யா. ‘உன்னால்தான் வளர்ந்தேன், உன்னால்தான் நிமிர்ந்தேன்’ என்றெல்லாம்...

Close