‘ நமீதா சீஸன் ஓவர், இனி நான்தான் நமீதா! ’ புகைச்சலை கிளப்பும் கிளாமர் குயின் நித்யா!
வானத்தில் சிரிக்கிற நட்சத்திரம் சட்டை பாக்கெட்டில் விழுந்த மாதிரி எப்பவாவது சில கவர்ச்சி அழகிகள் கோடம்பாக்கம் என்கிற சட்டை பாக்கெட்டில் விழுவார்கள். ‘சிலுக்குக்கு முன் சிலுக்குக்கு பின்’ என்று காலத்தை பிரிக்கிற அளவுக்கு கவர்ச்சியை பிரித்து மேய்ந்த நடிகைகள் வாரா வாரம் வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆரவாரம் எந்தளவுக்கு இருக்கிறது?
சம்பந்தப்பட்ட கவர்ச்சி நடிகைகளின் போஸ்டரை மாடு தின்கிற நேரத்தில் அவர்களது மார்க்கெட்டும் க்ளோஸ் ஆகிவிடுகிறதே, அந்தளவுக்குதான்.
சில்க் வாழ்ந்த காலம் குறைவு என்றாலும், அவரது அழகுக்கு இன்னும் இன்னும் ஆயுள் இருப்பது போல, சிலரை மட்டுமே ‘வாம்மா மின்னலு’ என்று அழைக்கிறார்கள் கவர்ச்சிக்கெனவே காத்திருக்கும் ரசிகர்கள். அப்படி வந்தவர்தான் நமீதா. இவரது சகாப்தம் முடிவடைந்துவிட்டதா? இல்லையா? என்பதை அவர் இனிமேல் எடுக்கப் போகும் முடிவுகள்தான் சொல்ல முடியும். ஆனால் அதற்குள் ‘நான்தான் நமீதாவின் இடத்தை பிடிப்பேன்’ என்று களத்தில் குதித்திருக்கிறார் நடிகை நித்யா.
‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தில் வயசான கணவருக்கு வாழ்க்கை பட்டு கட்டுமஸ்தான இளைஞர்களை பார்த்து ஏக்க பெருமூச்சும், எக்கச்சக்க அனல்மூச்சுமாக ஒருவித தவிப்போடு நடித்திருக்கிறார் நித்யா. மனசில் வருங்கால நமீதா தான்தான் என்கிற நம்பிக்கை இருக்கிறதாம் இவருக்கு. ‘இந்த படம் மட்டும் வரட்டும். அப்புறம் பாருங்க, நமீதாவை தேடி போறவங்க என்னை தேடி வர்ற மாதிரி ஆகுதா இல்லையான்னு?’ என்கிறார். ‘ஒரு சீனியர் நடிகையை, இப்பவும் மார்க்கெட்டில் கவர்ச்சிக்கென பட்டா போட்டிருக்கும் ஒரு நடிகையை பற்றி இப்படியா அப்பட்டமாக சொல்வீங்க’ என்றால், அதற்கு அவர் கவலைப்பட்ட மாதிரியே தெரியவில்லை. ‘நமீதா சீசன் முடிஞ்சுருச்சு. இனி என்னோட சீசன்தான். இதை நிருபித்து காட்டுவேன்’ என்று சவால் விடுகிறார்.
இவர் இப்படி பேசிக் கொண்டிருப்பது நமீதாவுக்கு தெரிந்தால் என்னாகுமோ? சப்போர்டுக்கு ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ டைரக்டர் கஸாலி கூட வரமாட்டார். ஏனென்றால் அவரும் நமீதா கட்சியாக இருக்கக்கூடும்.
Another glamour girl threatens Namitha’s place?
In the film world it is glamour ‘stars’ will have very short life and that they have to ‘earn’ name, fame and money within that period. Though there were several glamour artistes only ‘Silk’ Smitha is remembered even today for her beauty and glamorous attraction. Namitha who is currently enjoying her phase now in Kollywood, is now suddenly threatened of her position.
Nithya who is playing a girl married to a old person in Sainthadu Sainthadu’ says that once the film is released she would be much talked about for the glamour and ‘intrinsic’ acts in the film. She also says that she would receive more offers for glamorous roles as she would take the place of Namitha. When asked about naming an artiste in the competition, she said that the time for Namitha is over. “Now it is my season, and I will prove” she challenges.
nice i also acted in this movie