நயன்தாராவுக்கு ஒரு நீதி, தமன்னாவுக்கு ஒரு நீதி… அஜீத்திற்கு தெரிந்தே ஒரு அநீதி!

அஜீத்தின் ஆரம்பம் வருவதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி. அப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த நயன்தாராவின் புகைப்படத்தை தப்பி தவறி கூட வெளியிடவில்லை அப்படத்தின் டைரக்டர் விஷ்ணுவர்த்தன். அப்படம் வெளியான பின்பு விளம்பரங்களிலும் சரி, போஸ்டர்களிலும் சரி, அஜீத் மற்றும் ஆர்யாவின் படங்கள் இடம் பெற்றதே தவிர, நயன்தாராவின் படங்கள் எப்போதாவது கூட இல்லை. விசாரித்தபோது காதும் காதும் வைத்தது போல சில விஷயங்களை கசிய விட்டது பட வட்டாரம்.

பில்லா படத்தின் வெற்றிக்கு யாருடையா ஃபார்முலா காரணமோ, தெரியாது. ஆனால் கோடம்பாக்க குசும்பர்கள், நயன்தாராவின் டூ பீஸ்தான் இந்த படத்தின் வெற்றிக்கே காரணம் என்றார்கள். இது அஜீத்தின் காதுகளுக்
கு போயிருக்கலாம். அதற்கப்புறம் இருவரும் சேர்ந்து நடித்த ஆரம்பம் பட விளம்பரங்களில் நயன்தாராவின் படமே வராமல் பார்த்துக் கொள்கிற அளவுக்கு அவர் மோசமில்லை என்றாலும் அஜீத்தை குளிர்விக்கும் பொருட்டு நயன்தாரா இருட்டடிக்கப் பட்டார். எப்படியோ படம் ஓடி சக்கையாக பிழியப்பட்ட பிறகு போனால் போகிறதென நயன்தாரா படத்தையும் விளம்பரங்களில் போட ஆரம்பித்தார்கள். இதில் நயன்தாரா அப்செட் ஆகியிருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் வீரம் படத்தில் நடித்த தமன்னா, நயன்தாரா அளவுக்கு விட்டேத்தி வெடக்கோழியில்லை. ஒரு நாள் விளம்பரத்தில் தமன்னா படம் வராவிட்டாலும், டைரக்டருக்கு போன் வந்துவிடும் என்பதால், முதல் நாளில் இருந்தே தமன்னா படத்தையும் விளம்பரங்களில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

காதலில் மட்டுமல்ல, கண்ட கண்ட விஷயத்திலும் கூட ஏமாந்த சோணகிரி நயன்தாராதான் போலிருக்கிறது.

Nayanthara and Tamannah two sides of different coins

Nayanthara who has given back to back hits with Raja Rani and Arrambam was given a raw deal, at least so it appears. The makers of Arrambam have blacked out Nayanthara posters in publicity materials. It was said that Billa was super hit because of Nayanthara 2-piece swim suit and hence the makers this time wanted to make sure that Nayan pictures appear lately, after the film made blockbuster category.

In the case of Tamannah who acts with Ajith in Veeram, she ensures that her pictures are included in publicity materials and posters, by speaking to the relevant persons.

Though it is also said that Nayan normally makes her on screen performance speaks, she should know by appearing the posters and publicity materials one can always be in the lime-light.

 

Read previous post:
எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிதானாம்….

விஜய் சேதுபதிதான் இன்றைய சூழ்நிலையில் பரபரப்பான நடிகர் என்கிறார்கள். ஆனால் எல்லா சினிமா விழாக்களிலும் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. யார் அழைத்தாலும் அவர்களை மதித்து அந்த...

Close