நஸ்ரியாவை பின்னணியில் இருந்து இயக்குவது யார்? -வெளிவராத சுவாரஸ்யமான தகவல்கள்

கோடம்பாக்கத்தில் கூழாங்கல்லை நகர்த்தினால் கூட, இமயமலையே உடைந்தது போல எஃபெக்ட் கொடுப்பார்கள். ஆனால் கூழாங்கல் பெறாத விஷயத்திற்கு இமயமலையையே நகர்த்திவிட்டார் நஸ்ரியா. விடுவார்களா? ‘ஏதோ செமத்தியான காரணம் இருக்குப்பா… இல்லேன்னா அந்த புள்ள அப்படியெல்லாம் போற புள்ள இல்ல’ என்று சிலரும், ‘அட நீங்க வேற… ஆரம்பத்துல இருந்தே அது டார்ச்சர் மகாதேவிதாங்க. அத தெரியாம கமிட் பண்ணிட்டு எல்லாரும் ஈரத் துணியால கன்னத்தை துடைச்சுக்கிறாய்ங்க. பாவம்’ என்று வேறு சிலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பில் அவர் கொடுக்கிற டார்ச்சர்கள் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இப்போது இந்த விஷயத்தில் இவரை இயக்கிக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் நபர் யார்? அவர் ஏன் இவரை இயக்க வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் கோடம்பாக்கத்தில் பொட்டலம் பொட்டலமாக பதில் வைத்திருக்கிறார்கள்.

மற்றவர்கள் வாயாடுவது மாதிரி அது செமத்தியான காரணமாகதான் இருக்கிறது. ஷுட்டிங் முடிந்து பூசணிக்காய் உடைத்த பிறகு, ஒரு நாள் தனுஷ் போன் செய்தாராம் நஸ்ரியாவுக்கு. ‘கோவாவில் படப்பிடிப்பு இருக்கு. சில காட்சிகளின் பேட்ச் வொர்க் அது. அதனால் கிளம்பி வா’ என்றாராம். பாடல் காட்சிக்காக இதற்கு முன்பு சுவிட்சர்லாந்து போயிருந்தது நய்யாண்டி குழு. போன இடத்தில் நஸ்ரியாவுக்கு சில பல இக்கட்டுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்தே நய்யாண்டி டீமோடு பெரிய நட்பு வைத்துக் கொள்ள பிரியப்படவில்லையாம் அவர்.

இதை மறுபடியும் ரீவைண்ட் செய்து பார்த்த நஸ்ரியா, ‘நான் கோவாவுக்கு வர முடியாது. வேணும்னா என்னோட போர்ஷனை வேற யாரையாவது வச்சு மேட்ச் பண்ணிக்குங்க’ என்று கூறிவிட்டாராம். ‘அதெல்லாம் முடியாது. வந்தே ஆகணும்’ என்று தனுஷ் தரப்பிலிருந்து நஸ்ரியாவை வற்புறத்த, ‘அதுக்கெல்லாம் அஞ்சுற ஆள் நான் இல்ல’ என்று இவர் முரண்டு பிடிக்க, அதற்கப்புறம் நஸ்ரியாவின் பஞ்சாங்கத்தில் எல்லா பேஜ்களிலும் ராவுகாலம்.

தனது ஃபேவரைட் ஃபிரண்ட் ஜெய்யிடம் இதுபற்றி குமுறி குமுறி அழுதாராம் நஸ்ரியா. அவரது வழிகாட்டுதலின்படிதான் அடுத்தடுத்து முயல் சீற ஆரம்பித்திருப்பதாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில். ஜெய் சொன்னா ஏன் நஸ்ரியா கேட்கணும் என்கிற கேள்விக்கெல்லாம் பதில் தேட முயன்றால், அது பெரிய பஞ்சாயத்தை கூட்டும் என்பதால் இப்போதைக்கு இதோடு ஸ்டாப்!

போங்க… போங்க… போய் அவங்கவங்க வேலைய பாருங்க!

Who is behind Nazriya episode?

Now, every one here in Kollywood and the general public are unanimous that some one is acting behind Nazriya to do what she is doing now. We have already indicated this in our previous story. However the thrill here is various permutations and combinations being worked out by the industry circle breaking their head, as if Indian economy or the Bombay stock exchange will be in for a disastrous slide! It is very well known in Kollywood and people who thrives here too know it well. Kollywood makes a mountain out of a mole as well as it will say it is only a mole even if you show it is a mountain. That is exactly is happening on the Nazriya episode. As is usual here, there are two sides, a pro-Narzriya and an anti-Nazriya. While pro claims that Nazriya is a young innocent girl and she is being exploited, while the anti claims that Nazriya is arrogant and she had exhibited this several times during the shoots. Well, in Kodambakkam, people much without anything in their mouth, now there is a substance called Nazriya. So they would try to grind as much as possible to churn out stories after stories. However both sides are unanimous, it is not Nazriya who is doing all these things on her own, and some one is directing her. Who would be it? There is no prize for guessing! Already Jai is in the news for all wrong reasons and his alleged link with Nazriya encourages one to ask why not Jai? Whether he has anything to do with this or not, the churners of rumour mills will becom creative directors and go on to give information one after another, for all the questions raised on the subject. Well it is interesting days ahead for Kollywood and the media as well!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நஸ்ரியா என்ற நடிகையின் சுயநலத்தில் எங்கே வந்தது இஸ்லாமியம்?

நஸ்ரியா போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் கொடுக்கிறவரைக்கும் இருந்த பார்வை வேறு. இப்போது அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது இந்த விவகாரத்தில் கையாளப்பட்டிருக்கும் நுணுக்கமான...

Close