பவர் ஸ்டார் அழைப்பு, தனுஷ் ஓட்டம்!

இதுக்கு நேரடியா ஒரு கத்திய வச்சு மிரட்னா கூட தப்பில்லே, ஆனா கால்ஷீட் கேட்டு மிரட்றாங்களே என்று கலங்கிப் போயிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தின் செகன்ட் கிளாஸ் ஹீரோக்கள். ரஜினி, கமல், அஜீத், விஜய் தவிர பிற ஹீரோக்கள் யாரையுமே விட்டு வைக்கவில்லையாம் இந்த மிரட்டல் பார்ட்டிகளான இருவர்.

அவர்கள் யார் யார் என்று ஆர்வமாக கேட்கும் வாசர்களுக்கு முதலில் ஒருவரது பெயர் மட்டும் இங்கே. பவர் ஸ்டார் சீனிதான் அவர். ஆனந்த தொல்லை மாதிரி ஆஃப் பாயில் படங்களாக எடுத்து தள்ளிய இவருக்கு சினிமா கற்று கொடுத்த வெற்றி ரகசியம் மெல்ல மெல்ல இப்போதுதான் முழுசாக புரிய ஆரம்பித்திருக்கிறதாம். உப்புமா கிண்டினாலும் அதிலும் ஒரு ரசனை இருக்கணும். அப்பதான் போணியாகும் என்ற முடிவுக்கு வந்தவர், வெற்றிப்பட இயக்குனர்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களின் காம்பினேஷனில்தான் படங்கள் தயாரிக்கணும் என்ற முடிவுக்கு வந்தாராம்.

முதலில் இவரது பார்வை தனுஷ் பக்கமாக திரும்பியிருக்கிறது. கடந்த சில வாரங்களாக அவரை துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறாராம். எவ்வளவு சம்பளம் தருவதற்கும் இவர் தயாராக இருந்தாலும், அந்த சம்பளம் எங்கிருந்து வரும், அதன் பின்னணியில் இருக்கும் அல்சர் அவஸ்தைகளை கண்கூடாக காணவில்லை என்றாலும் காது வழியாக உணர்ந்தவர் என்பதால், தனுஷ் எஸ்கேப். இருந்தாலும் விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறார் பவர்.

ஆமாம்… இவரைப்போல முன்னணி ஹீரோக்களை விரட்டி விரட்டி கால்ஷீட் கேட்கும் அந்த இன்னொரு மிரட்டல் மன்னன் யார்? தேவயானி மணாளர்தானாம். யார் போன் நம்பரையும் ஸ்டோர் பண்ணி வைக்காத ஹீரோக்கள் கூட இவ்விருவரது நம்பரை ஸ்டோர் பண்ணி வைத்திருக்கிறார்கள். தப்பி தவறி கூட எடுத்துவிடக் கூடாது என்கிற முன் ஜாக்கிரதை காரணமாகதான்…

Power star rings, Dhanush runs!

Kollywood’s 2nd rung heroes and directors are panicky as they are constantly chased by two un-canny producers in the industry. One is Power Star Srinivasan. Though he has taken few Tamil films which silently sank, he wanted to produce films with heroes and directors, who are saleable, perhaps to make a resurrection to his sagging career. With this intention he approached Dhanush for call-sheets for a film. Hearing it, Dhanush went incognito. Apparently he does not want to take a risk of answering questions from authorities. But the power star he is, not relenting and chasing him, hoping he would change his mind.

 

The other person whom Kollywood fears much is Rajakumaran, husband of Devyani. People here at Kollywood make sure not to take the calls of these important persons, even in their sleep.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விழா பாடல் வெளியீட்டு விழா ஸ்டில்கள்

[nggallery id=75]

Close